நேர்மை என்றும் அழியாது!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இந்த உறவுக்கு காரணம் பெண்களடா
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு

(உள்ளத்தின்…) 

காதல் என்பது தேன் கூடு
அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
அது கனவாய் போனால் மனம் வாடும்

(உள்ளத்தின்…) 

உயிருக்கு உருவம் கிடையாது
அந்த உயிரின்றி எதுவும் நடவாது
உருவத்தில் உண்மை தெரியாது
என்றும் உலகத்தில் நேர்மை அழியாது

(உள்ளத்தின்…) 

– 1965-ம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளிவந்த  ‘இரவும் பகலும்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் ஆலங்குடி சோமு.

இசை – டி.ஆர். பாப்பா.

குரல் – டி.எம்.சௌந்திரராஜன்.

Comments (0)
Add Comment