மாதம் 2 சதவிகிதம் வட்டி தருகிறேன்: பாரதி!

நூல் வாசிப்பு:

*

“மகாகவி பாரதி மதுரையில் இருந்த நண்பரான ஸ்ரீநிவாஸ வரதாசார்யனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பகுதி:

“என்னுடைய பழைய பிரசுரங்களினால் எனக்கிருக்கும் உயர்ந்த மதிப்பினாலும், ஈடு இணையற்ற செல்வாக்கினாலும், இவை எல்லாவற்றினாலும், என்னுடைய நூல்கள் அமோகமாக விற்பனையாவது திண்ணம்.

புத்தகங்களை அச்சடிப்பதற்கான செலவிற்காக உங்களால் முடிந்த அளவு தொகையைத் தயவு செய்து கடனாக அனுப்பி வையுங்கள்.

உங்களிடமிருந்து குறைந்தபட்சம் 100 ரூபாயாவது எதிர்பார்க்கிறேன்.

கிருபை கூர்ந்து தங்கள் நண்பர்கள் இருபது பேரையாவது இதே மாதிரியோ, அல்லது அதிகமான தொகையோ கடன் தந்து உதவும்படி தூண்டுங்கள்.

உங்களிடமிருந்தும், உங்கள் நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் தொகைகளுக்கு நான் ஸ்டாம்பு ஒட்டி புரோ நோட்டு எழுதிக் கொடுக்கிறேன். எனக்குக் கிடைக்கக் கூடிய அபரிமிதமான லாபத்தை முன்னிட்டு மாதம் 2 சதவிகிதம் தாராளமாகவே வட்டி தருகிறேன்”

ரா.அ.பத்மநாபன் எழுதிய ‘சித்திர பாரதி’ நூல்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர் கோவில்-629 001.
தொ.பே: 04652 – 278525

Comments (0)
Add Comment