மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான் 

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா

மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா

உனக்காக ஒன்று
எனக்காக ஒன்று
ஒருபோதும்
தெய்வம் கொடுத்ததில்லை

(கொடுத்ததெல்லாம்)

படைத்தவன் மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை

கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்

பலர் வாட வாட
சிலர் வாழ
வாழ – ஒரு போதும்
தெய்வம் கொடுத்ததில்லை

(கொடுத்ததெல்லாம்)

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள்
இல்லை என்பார் 
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய
இருள் இருக்கும்

எதுவந்த போதும்
பொதுவென்று
வைத்து வாழ்கின்ற
பேரை வாழ்த்திடுவோம்

(கொடுத்ததெல்லாம்)

1964-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘படகோட்டி‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.

Comments (0)
Add Comment