உயர்ந்த இடத்தில் இருக்கும் போது  உலகம் உன்னை மதிக்கும்!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா..
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே..
கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது.. 

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம்
இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது

(பரமசிவன்) 

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

(பரமசிவன்) 

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது..
இதில் அர்த்தம் உள்ளது

(பரமசிவன்) 

– 1973-ம் ஆண்டு வெளிவந்த ‘சூரியகாந்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

Comments (0)
Add Comment