நூல் வாசிப்பு :
”ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உட்பட மற்ற மாநிலங்களில் தீவிர மொழித் தேசிய உணர்வு ஓங்கியிருப்பதாகக் கருதப்பட்டாலும், எந்த மாநிலமும் அரசமைப்பு மாற்றத்தையோ, முழுத் தன்னாட்சியையோ, சுய நிர்ணய உரிமையையோ கோருவதில்லை. அவ்வப்போது அதிக நிதி ஆதாரங்களை மட்டுமே கோருகின்றன.
மற்றவை மாநிலங்கள் கோருகின்றன. இந்நிலையில், தமிழ்த்தேசிய இனம் தனியாக நின்று எவ்வளவு போராடினாலும், அது எளிதாக நசுக்கப்பட்டு விடும்.
எத்துணை நியாயமான பெரிய போராட்டமும் தனிநிலையில் மேற்கொள்ளப்பட்டால், முதலில் நடைபெற அனுமதிக்கப்பட்டு அயர்வு உண்டாக்கப்பட்டு, போராளிகளிடையே ஒழுக்கம், நாணயச் சிதைவுகளை விதைத்து, இறுதியில் இராணுவம் மூலம் அடக்கி விடும்”
– வே.ஆனைமுத்து- தமிழ்த் தேசியம் பேருரைகள் – நூலில் இருந்து ஒரு பகுதி.