– இந்திய வானிலை மையம் தகவல்
வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று வடதமிழகத்தில் நாளை கனமழைக்கும், நாளை மறுநாள் அதீத கனமழைக்கும் வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இது, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11-ம் தேதி வடதமிழக கடற்கரை பகுதிகளை நெருங்கும்.
இதனால் வடதமிழகத்தில் நாளை கனமழைக்கும், நாளை மறுநாள் அதீத கனமழைக்கும் வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக தென்காசி, நெல்லை, விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.