புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை

வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம்
மனம் இருப்பதில்லை

மனம் இருக்கும் மனிதரிடம்
பணம் இருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே
வந்ததெல்லாம் சொந்தம்

பணம் இல்லாத மனிதருக்கு
சொந்தமெல்லாம் துன்பம்

                            (புத்தியுள்ள…)

பருவம் வந்த அனைவருமே
காதல் கொள்வதில்லை

காதல் கொண்ட அனைவருமே
மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே
சேர்ந்து வாழ்வதில்லை

சேர்ந்த வாழும் அனைவருமே
சேர்ந்து போவதில்லை

                          (புத்தியுள்ள…)

கனவு காணும் மனிதனுக்கு
நினைப்பதெல்லாம் கனவு

அவன் காணுகின்ற கனவினிலே
வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள்
அவனை பார்த்து சிரிப்பாள்

அவள் கனவில் யார் வருவார்?
யாரை பார்த்து அணைப்பாள்?

                            (புத்தியுள்ள….)

– 1962-ஆம் ஆண்டு சந்திரபாபு நடிப்பில் வெளிவந்த ‘அன்னை’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கண்ணதாசன்.

Comments (0)
Add Comment