சட்டென்று உயர்ந்திருக்கின்றது எரிபொருட்கள் மற்றும் தங்கத்தின் விலை.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயை நெருங்கிவிட்டது. டீசல் 82.66 ஆகிவிட்டது. இதனால் போக்குவரத்துக் கட்டணத்திலிருந்து மளிகை, மற்றும் காய்கறி விலை வரைக்கும் உயர வாய்ப்பிருக்கிறது.
பட்ஜெட்டுக்குப் பிந்திய மாற்றம் இது தான்.
தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ 576 அளவுக்கு உயர்ந்து, நகை வாங்கும் மனநிலையில் இருந்தவர்களைத் திகைக்க வைத்திருக்கிறது.
தங்கம் விலை உயர்வு என்றால் கூட அதில் சாமானியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டவில்லை என்று ஏதோ ஒருவிதத்தில் சமாதானப்பட்டுக் கொள்ளலாம்.
ஆனால் எரி பொருட்களின் விலை உயர்வு அதைப் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் ஏற்றி, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் மக்களை மேலும் தத்தளிக்க வைத்துவிடும்.
மயிலிறகு என்றாலும் அளவுக்கு மீறி ஏற்றினால் என்னவாகும் என்பதற்கு ஏற்கனவே பலர் இப்போது அடிக்கடி மேற்கோள் காட்டும் திருவள்ளுவரே சொல்லியிருப்பதையும் கவனிக்க வேண்டும்.
10.02.2021 01 : 35 P.M