காந்தி மறைந்த நாளன்று! – பெரியார்

காந்தியின் நினைவுநாளையொட்டி (30.01.2021) மீள்பதிவு.

மகாத்மா காந்தியின் மறைவை தந்தை பெரியார் எதிர்கொண்ட விதம் வியப்பூட்டுகிறது.

தன்னுடைய கருத்தியலில் இருந்து முழுக்க மாறுபட்டவராக காந்தி இருந்தாலும், அவருடைய இழப்பு உருவாக்கிய வெறுமையுணர்வை, அவர் பிரதிபலித்த விதம் – கருத்து முரண்பாடுகளை மீறிச் சக மனிதர்களை நமக்கு எப்படி மதிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

‘காந்தி தேசம்’ என்று தேசத்திற்குப் பெயரிட வேண்டும் என்று சொல்கிற அளவுக்குப் போன பெரியார், காந்தி மறைந்த நாளில் எழுதிய எழுத்து:

“காந்தியார் மறைவுக்கு நான் துக்கப்பட்டது, பெரும்பாலோருக்கு முதலைக் கண்ணீராகவே தோன்றியது; தோன்றினால் தோன்றட்டும்.

அவர் மறைவுக்கு இனிப்பு வழங்கிய மாபாதகக் கூட்டத்திற்கு, அவர் செத்ததைப் பற்றிக் கவலை இல்லை; மகிழ்ச்சி அடைந்தது.

ஆனால் அவர் துர்மரணமடைந்த சேதியைக் கேட்டதும் எனக்குத் துக்கம் தாங்க முடியவில்லை; தலைவலி வந்துவிட்டது; என்ன செய்கிறேன் என்பதுகூடப் புரியாமல் நெடுநேரம் 15 சதுரமுள்ள அறையில் இங்கும் அங்கும் உலவிக்கொண்டிருந்தேன்.

காரணம் என்னவென்றால் அவரிடம் அந்தரங்கத்தில் எனக்கு இருந்த பற்றுதல், அவர் கொள்கைகளில், உழைப்பில் இருந்த நலன்கள்; அப்படிப்பட்டவருக்கு இதுதானா கூலி என்ற மனவேதனை ஆகியவையே.

அவருடைய முறையில் வேண்டுமானால் அபிப்ராய பேதம் பலமாக இருந்ததுண்டு. ஆனால், அவருடைய முக்கியக் கொள்கையில் அதாவது, சத்தியம், அஹிம்சை, அன்பு ஆகியவற்றில் அபிப்ராய பேதம் இல்லையே!”

(1948-ல் காந்தி மறைவையொட்டி தந்தை பெரியார் விடுதலையில் எழுதியவை)

நன்றி: பூ.கோ.சரவணனின் முகநூல் பதிவு…

30.01.2021   12 : 45 P.M

Comments (0)
Add Comment