வளர்பிறையாக வாழிய வாழியவே!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே …            

                                    (நூறாண்டு…) 

குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குன்றாத நவநிதியாக
துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக
நீ வாழ்க… நீ வாழ்க…

                                  (நூறாண்டு…) 

விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
மலடென்ற பேரும் பொய்யாக
வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக
நீ வாழ்க… நீ வாழ்க…

                                   (நூறாண்டு…) 

-1967 ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘பேசும் தெய்வம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.

28.01.2021    10 : 49 A.M

Comments (0)
Add Comment