நினைவில் நிற்கும் வரிகள்:
***
பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா வெறகுக்காகுமா – ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?
(பார்த்தா…)
கட்டழகு மேனியைப் பார் பொட்டும் பூவுமா – நீட்டி
கட்டையிலே படுத்து விட்டா காசுக்காகுமா?
வட்டமிடும் காளையைப் பார் வாட்ட சாட்டமா – கூனி
வளைஞ்சிவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா?
(பார்த்தா…)
பொன்னும் பொருளும் மூட்டைகட்டி போட்டு வச்சாரு – இவரு
போன வருஷம் மழையை நம்பி வெதை வெதச்சாரு
ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு – ஈசன்
போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு…
(பார்த்தா…)
அறுவடையை முடிக்கு முன்னே வெதைக்கலாகுமா – அட
ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா?
பத்துப் பிள்ளை பெத்த பின்னும் எட்டு மாசமா – இந்தப்
பாவி மகளுக்கெந்த நாளும் கர்ப்ப வேஷமா?
(பார்த்தா…)
-1965 ஆம் ஆண்டு சிவாஜிகணேசன் நடிப்பில் வெளிவந்த ‘திருவிளையாடல்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
27.01.2021 12 : 44 P.M