மலர் மஞ்சம்-தி.ஜானகிராமன்!

படிக்கட்டிலேயே உட்கார்ந்தார் கோணவாயா்.

இப்பாலும், அப்பாலும் அறுபத்துமூன்று கட்டங்களும் தெரிந்தன.

படிக்கட்டுகளிலேயே ஒரு நகரத்தை அமைத்துவிட்டது போல இருந்தது.

கோணவாயரின் மனதிலே ஒன்றுமில்லை. நினைவே இல்லாத சூனியமாகி இருந்தது அது.

கண்ணில்பட்ட காட்சிகளாகவே மனது அவ்வப்போது மாறிக் கொண்டிருந்தது. கண்டதே காட்சி கொண்டதே கோலமாக குழந்தையாக உட்கார்ந்து இருந்தார் அவர்.

கடைசியில் சிறிது சிறிதாக அந்தி வெளிா் மங்கி இருளுள் மறைந்தது. எதிர்க்கரையிலும், கட்டங்களிலும் விளக்குகள் தோன்றின. நீரில் மிதக்கும் படகுகள் சிலவற்றில் ஒளிகள் தெரித்தன.

ஹனுமான் கட்டத்திலேயே காத்துக் கொண்டிருந்தார் அவர்.

இருட்டி வெகு நேரம் கழித்துதான் ராமையாவின் குரல் கேட்டது.

‘நாய்க்கரா?’

‘நாயக்கர் இல்லை. நாயக்கர் செத்துப் போய்விட்டார். கூப்பிடாமயே பேசு… சாப்பிட்டாச்சா?’

‘ஆச்சு’

‘சாமி தரிசனம் பண்ணியாச்சா?’

‘ஆச்சு’

‘வடிவு?’

‘வடிவும் படுத்துட்டா… உலகும் தூங்கப் போயிட்டாரு’

‘நல்லது’

சிறிது மௌனத்திற்குப் பிறகு நாயக்கர் வாயைத் திறந்தார்.

‘நிஜமாத்தா சொல்றேன். உங்களுக்கு இப்படி வைராக்கியம் வரும்னு நினைக்கிலே கதை சொல்வாங்களே, அது சரியா போச்சு சன்னாசம் வாங்கிக் கொள்வது எப்படின்னு கேட்டுகிட்டே இருந்தானாம், பக்கத்து வீட்டுக்காரனை ஒரு நாளைக்கு திடீர்னு ‘இப்படித்தான் வாங்கிக்கிறது’ன்னு வேட்டியைக் கிழிச்சு கௌபீனமாகக் கட்டிக்கொண்டு எழுந்து வெளியே போயிட்டானாம் பக்கத்து வீட்டுக்காரன். அந்த மாதிரி ஆயிட்டது என்றார்’ ராமையா.

‘பின்னே நான் மட்டும் சொன்ன வார்த்தையைக் காப்பாத்த வேணாமா?’

‘நீங்க என்ன வார்த்தை சொன்னிங்க?’

‘உன் மக கிட்டே சொன்னேன். என் உசுரு இருக்கிற வரைக்கும் உன் மனசுக்கு விரோதமாக எதுவும் நடக்கும் படியாக விடமாட்டேன்னு.. நடத்திருத்து கிளம்பிட்டேன்.

உசுர விட முக்கியமா? நாமா உசுரை போக்கிக்க முடியுமா? சந்யாசம் என்பது வேற ஜென்மம் மாதிரி. அதனாலதான் இப்படி கிளம்பிட்டேன்.’

‘என்னது!’

‘திகைத்து போய் அவரைப் பார்த்தாா் ராமையா’

சிறு பிள்ளைப் பேசுறாப்ல இருக்கா. நடந்தது அதுதான். ‘குழந்தை மனசுதான் திரும்பிடுச்சே’

‘நீ திரும்பின… இல்லாட்டி திரும்பிடுமா’

ராமையா சிறிது நேரம் சமைந்து போய் உட்கார்திருந்தார். கோயில் மணிகள் எங்கிருந்தோ ஒலித்துக் கொண்டிருந்தன. எதிர்க்கரையில் மங்கி மினுங்கிய விளக்குகளின் ஒளி, கங்கை நீரில் நீண்டு விழுந்து நெளிந்து கொண்டிருந்தது.

சற்று கழத்து மௌனத்தை கலைத்தார் கோணவாயா்.

‘அதுபோவுது. மவளும், மாப்பிள்ளையும் எப்படி இருக்காங்க?’

‘ரொம்ப பிரியமா தான் இருக்காங்க’

‘கல்யாணம் பண்ணியாச்சா?’

‘குழந்தை முதல் வருஷம் இன்டர் படிச்சுத் தேறிச்சு. உடனே போன வைகாசியிலே கல்யாணத்தைப் பண்ணினேன். அப்புறமும் படிச்சது.

இந்த வருஷம் கவர்மெண்ட் பரீட்சையிலும் நல்லா தேறியிருக்கு. மேலே படிக்கலேன்னிட்டது. தங்கராஜன் பி.ஏ.முடிச்சிட்டு, உங்க மவனோட கூட்டு சேர்ந்து, நெல்லு மிஷனும், ஜவுளிக்கடையும் வச்சிருக்கான்.

நெல்லு மிஷன் பொிசு. மொத்தத்தையும் அரைக்கிறது. அதைத் தங்கராஜன் பாத்துக்கிறான். ஜவுளிக்கடையை உங்க மகன் பாத்துக்கிறான்.

இரும்புக் கடையை உங்க மாப்பிள்ளை பேருக்கு எழுதிக் கொடுத்துவிட்டான். அவரு வேலையை ராஜினாமாப் பண்ணிட்டு உங்க இடத்திலேயே உட்கார்ந்து இருக்காரு.

‘பலேபலே, உலகம் ரொம்ப மாறிக் கிடக்கே’ என்று சிரித்தார் கோணவாயா். ‘…ம்…கல்யாணம் ரொம்ப பலமோ?’

‘தஞ்சாவூரிலேதான் நம்ம வீட்டிலேதான் நடந்தது. பலம் என்ன? எல்லோரும் வந்திருந்தாங்க. சாந்தி முகூர்த்தத்தன்னிக்கி செல்லம்தான் படுக்கையறை ஜோடிச்சிது.

ரெட்டிபாளையத்தா ஒருத்தியைப் புடிச்சி பதினைஞ்சு கூடையிருக்கும், ரோஜாப்பூவைக் கொண்டாரச் சொல்லி ஒரு சாண் உசரத்துக்கு படுக்கையிலே போட்டுடுத்து.’

‘முழுப்பூவாவா? உதிா்த்தா?’

‘இது என்ன கேள்வி? உதிா்க்காமலேயா போடுவாங்க?’

‘உதிா்க்காம போட்டா கொஞ்சம் சொரசொரன்னு இருக்கும். மனசுல இருக்குறது போதும்னு விட்டுப்பிட்டாப்பல இருக்கு’ என்று சிரித்தார் கோணவாயா்.’

‘அப்படின்னா’

‘மஞ்சத்திலே பக்கத்திலே படுத்திருப்பான் உன் மாப்பிள்ளை. மனசிலே அந்தப் புள்ளேயும் வந்து வந்து போகுமில்ல?

அது தானே எங்கேயும் நடக்குது! என்னை அப்படி வெறுப்பாப் பார்க்காதே அதுதான் நடப்புங்கறதைச் சொன்னேன்.’

‘அது எப்படி நடக்கும்’

‘உன் மாதிரியே உலகமெல்லாம் இருக்குமா? சரி அதுக்கு என்ன இப்ப? உன் மக இன்னும் ஆடிக்கிட்டிருக்கா?’

‘வேளை தப்பினாலும் ஆட்டம் தப்புறதில்லை. சாயங்காலம் விளக்கேத்தி வச்சுவுடனே ஆரம்பிச்சுடுது… உடம்பு கிடம்பு சரியில்லாட்டி கூட விடறதில்லே…’

‘அதுதான் வேணும். நீயும் திருப்தியாயிருக்கே’

‘நிம்மதியாத்தான் இருந்தேன்…’

‘இப்ப என் கோணவாயாலே என்னத்தையோ சொல்லிக் கலச்சிப்பிட்டேன்னு வேதனபை்படறே… இல்லியே?

அதையெல்லாம் நினைக்கப்படாது. உன் மக உன்னைவிட… வீம்பு பிடிச்சவ. உன் மாப்பிள்ளையை விட்டு ஒரு நிமிஷம் பிாியமாட்டா.

‘இதை சொல்றதுக்காகவா கூப்பிட்டீங்க?’

‘அட போடா பித்துக்குளி… உங்ககிட்ட சொல்லிட்டு போகணும்னு வரவழைச்சேன்’

‘எங்கே போறீங்க?’

‘கிளம்பின நாளா நடையாலே இந்த உடம்பு ஊா் ஊரா அலைஞ்சு இஞ்ச வந்து சோ்ந்தது. ஒரு வருஷம் ஆச்சு, அதுவும் தளர்ந்து போச்சு. போன வெள்ளிக்கிழமை ஒரு கனா கண்டேன்.

நீங்கள்ளாம் ஒரு பெட்டியைத் தண்ணிக்குள்ள இறக்கிறாப்பல.

பெட்டி தண்ணிக்குள்ளாற விழுந்துச்சு. அப்புறம் பார்த்தா நான் தான் அதுக்குள்ளார இருக்கேன்.’

‘என்னா இது?’

‘நிஜமாத்தான் எனக்கும் உடம்பை தூக்க முடியலே. சும்மா பழக்கத்திலேயே தான் தூக்கிகிட்டு அலையறேன். சின்ன புள்ளைங்கல்லாம் அப்பா செருப்பைப் போட்டுகிட்டு நடக்கும் பாரு-அந்த மாதிரி இருக்கு இப்ப எனக்கு.

இதை எப்படிப்பா வீசி எறியலாம்னு இருக்கேன். இங்கே வாயேன்.’ என்று எழுந்தார் கோணவாயா். அவரோடு நடந்தாா் ராமையாவும்.

படிக்கட்டு வழியாகேவே ஹாிச்சந்திரக் கட்டடத்தை நோக்கி நடந்து மேலே ஏறி கோணவாயா் ராமையாவை அருகே அழைத்தாா்.

27.01.2021 04 : 56 P.M

Comments (0)
Add Comment