மணாவின் பக்கங்கள்

இந்தியாவில் குருட்டு நம்பிக்கைகள் அதிகம்!

பரண்: பிரமிள் என்றழைக்கப்பட்ட தமிழின் முக்கியமான கவிஞரும், விமர்சகருமான தருமு சிவராமுவிடம் 1979-ல் எடுக்கப்பட்ட நேர்காணலில் இருந்து ஒரு பகுதி. கேள்வி: மேல் நாட்டில் ஆழ்ந்த நுண்மையான விஷயங்கள் எல்லாம் தகுந்த ஆதரவுடன் கவனிப்புக்கு உள்ளாகையில், இங்கு அதுவும் சமய, வேதாந்தக் கருத்துக்கள் வேரூன்றிய நாட்டில் தற்போது கருத்து நுண்மைக்கு ஆதரவில்லாமல் போனதற்குக் காரணம் கூற முடிகிறதா? பிரமிள் பதில்: இந்தியாவில் புத்தர் செயல்பட்ட காலமும், அவரது கருத்துக்கள் உணரப்பட்ட காலமும் தவிர, மற்றைய காலங்களில் குருட்டு […]

இப்படியும் ஒரு ‘குரு’ பக்தி!

மகா வித்வான் மீனாட்சி சுந்தரனார் அவர்களைப் பற்றி வரலாற்று நூலின் முன்னுரையில் உ.வே.சாமி நாதன் அவர்களை இப்படி எழுதி இருக்கிறார். என் ஆசிரியரின் முழுப் பெயரையும் இவ்வளவு நாள் கழித்தும் குறிப்பிட்டு எழுத என் பேனா கூசுகிறது.

நினைவுகளின் உயிர்ப்பில் கி.ரா…!

“அய்யா.. நீங்க எப்போ இருந்து எழுத ஆரம்பிச்சீங்கய்யா?” “ தம்பீ.. என்ன கேட்டீங்க?” அதே கேள்வியை மறுபடியும் அதே தொனியில் கேட்டிருக்கிறார் கி.ரா.வுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த இளம் பத்திரிகையாளர். பதிலுக்கு பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார் கி.ரா. “தம்பீ.. நான் உங்க கேள்விக்குப் பதில் சொல்றது இருக்கட்டும். முதல்லே நீங்க நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்க…” “சரிங்கய்யா” “நான் எழுதினதிலே எதை நீ படிச்சிருக்க.. அதைச் சொல்லு பார்ப்போம்” “நான் ஒண்ணும் படிச்சதில்லீங்கய்யா.. ஆபிசில் கேள்விகளை […]

மதுவிலக்கு: வாக்கு வங்கியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது!

சர்க்கார் எவ்வளவு தான் சட்டம் போட்டாலும், கள் குடிப்பவன் குடித்துக் கொண்டுதான் இருப்பான்; இறக்குபவன் இறக்கிக் கொண்டுதான் இருப்பான்.

இந்த மதுவிலக்கு – காரியத்துக்குப் பயன்படாது; ஓட்டுக்குத்தான் பயன்படும்.

குழந்தைமைக் குரலில் வாழ்ந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி!

தமிழ் சினிமாவிற்கு எம்.எஸ்.ராஜேஸ்வரியை அறிமுகம் செய்தவர் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான பி.ஆர்.பந்துலு. மதுரை சடகோபன் ராஜேஸ்வரி என்பதுதான் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

பார்வைத் திறனை அதிகரிக்கும் பொன்னாங்கண்ணி!

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையை மிக முக்கியமான ஒன்றாகக் கூறலாம். அந்த அளவுக்கு அதில் சத்துக்கள் நிறைந்துள்ளன. பொன்னாங்கண்ணி கீரையைச் சாப்பிட்டு வந்தால் பகலில், வானத்தில் தெரியும் நட்சத்திரங்களைத் தெளிவாகக் காணலாம் என்பார்கள்.