நேற்றைய நிழல்

படைப்பாளிக்குத் தந்திரங்கள் தெரியாது!

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’’ பிரபஞ்சன் அடிக்கடி ராகத்துடன் முணுமுணுக்கும் இந்தப் பாடலுக்கும் அவருடைய வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. “காலம் என்னை எப்படியெல்லாம் வழிநடத்தியதோ அப்படியே அதன் வழியில் போயிருக்கிறேன்’’ – என்று தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் பிரபஞ்சன். அவருடைய இயற்பெயரான வைத்தியலிங்கம் என்று கூப்பிடுகிறவர்கள் கொஞ்சப் பேர்கள் தான். தன்னுடைய அப்பா நடத்தி வந்த கள்ளுக்கடையைப் பற்றியும், அதற்கு வந்த கூட்டத்தைப் பற்றியும், ஒரே நாளில் கள்ளுக்கடையை அப்பா கைவிட்டுவிட்டதைப் பற்றியும் […]

என் உறவை நான் மறவேன்!

அருமை நிழல்: கோட் சூட்டுடன் காட்சியளிக்கும் மக்கள் திலகத்துடன் திருமதி ஜானகி எம்.ஜி.ஆர், நடிகர் அசோகன்.

கரக்பூர் ரயில் நிலையத்தில் சீறிய வ.உ.சி!

“நாங்கள் கிலாபத் ஸ்பெஷல் ரயிலில் கல்கத்தா பயணம் செய்து கொண்டிருந்தபோது, கல்கத்தாவுக்கு முன்னால் கரக்பூர் என்ற ஒரு பெரிய ரயில் நிலையம். அங்கே நாங்கள் சென்ற வண்டி நின்றது. சுமார் மூன்று மணி நேரமாகியும் வண்டி புறப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று பயணிகள் கேட்டார்கள். கல்கத்தா மெயில் வண்டி பின்னால் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த மெயில் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து எங்கள் ஸ்பெஷலுக்கு முன்பு புறப்படும் என்றும், அது புறப்பட்டு போன பின்பு அரை […]

வாழ்வது வேறு; உயிரோடு இருப்பது வேறு!

பரண்: ”உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, ஈகை, இரக்கம் இத்தனையும் வளர்ந்து செழித்த இந்தப் புண்ணிய பூமியில் இன்று அவை எல்லாம் வாடிக்கூனிக்குறுகிப் பட்டே போச்சு. இதற்காக அழக்கூட முடியவில்லை. இன்றைக்கு அவற்றின் இடத்தில் பொய், பித்தலாட்டம், லஞ்சம், ஒழுக்கக்கேடு எல்லாம் வளரத் தொடங்கிவிட்டன. இங்கே எப்படி வாழ்வது? எதற்காக வாழ்வது? இப்போது நான் உயிரோடு மட்டுமே இருக்கிறேன். வாழ்வதாகச் சொல்ல முடியவில்லை. வாழ்வது வேறு, உயிரோடு இருப்பது வேறு” – – மொழிப் போராட்டத்தில் பங்கேற்று […]

சக்தி கிருஷ்ணசாமியைப்போல் யாராலும் சிறந்த வசனங்களை எழுத முடியாது!

சக்தி கிருஷ்ணசாமியிம் ம.பொ.சி. எழுதிய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டு, அதையொட்டி கட்டபொம்மன் நாடகத்தை எழுதும்படிக் கேட்டுக்கொண்டார் சிவாஜி. சிவாஜியின் விருப்பத்தை நிறைவேற்ற 30 நாட்களில் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகத்தை எழுதி முடித்தார் சக்தி கிருஷ்ணசாமி. திரையில் தனக்குக் கிடைத்த ஊதியத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயை கிருஷ்ணசாமியிடம் கொடுத்து பிரம்மாண்ட செட்களுக்கும் உடைகளுக்கும் செலவு செய்யும்படி சொன்னார் சிவாஜி. 1957, ஆகஸ்ட் 29-ஆம் தேதி சேலத்தில் பிரம்மாண்டமாக அரங்கேறியது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகம். அரங்கேற்றதுக்கு சின்ன அண்ணாமலையும் சிலம்புச் […]

இயக்குநர் ஸ்ரீதரைக் காப்பாற்றிய ‘சிவந்த மண்’!

பெட்டியிலே விடப்பட்ட மகன், மாபெரும் கொடை வள்ளல் கர்ணனாக ஆனானே, அதைப்போல, ஸ்ரீதர் செலவிட்ட பணமும் உழைப்பும் ‘சிவந்த மண்’ படமாகி வாரி வழங்கியது.