‘குட் பேட் அக்லி’ – இது ஆதிக்(க) ‘சம்பவம்’!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆழப்புழா ஜிம்கானா – வழக்கமான ‘ஸ்போர்ட்ஸ்’ படமா?
விளையாட்டுகளை மையமாகக் கொண்ட படங்களின் கதைகள் இப்படித்தான் இருக்குமென்ற முடிவுக்கு ரசிகர்கள் உடனடியாக வந்துவிட முடியும். காரணம், கடந்த சில ஆண்டுகளாக இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இத்யாதி மொழிகளில் வெளிவந்த ’ஸ்போர்ட்ஸ்’ வகைமை திரைப்படங்கள் குறிப்பிட்ட ‘பார்முலா’வில் தோற்றமளித்தது தான். பெரும்பாலும் ‘தோற்றவன் ஜெயிப்பான்’ என்பதுதான் அவற்றின் கிளைமேக்ஸாக இருக்கும். அதனால், அப்படங்களில் உள்ள ‘க்ளிஷே’வான விஷயங்களை விசிறியெறிந்துவிட்டு ’வித்தியாசமாக’ கதை சொல்லுவதென்பது கொஞ்சம் கடினமான விஷயம். சித்திரை நன்னாளையொட்டி தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் மலையாளத் […]
‘க.மு. க.பி.’ – ‘கல்யாணமான’ காதலர்களுக்கானது!
கல்யாண பந்தத்தில் இணைந்த காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தானாகத் தீர்வுகளை உணர்கிற வகையில் உள்ளது ‘க.மு. க.பி.’ படம்.
டெஸ்ட் – இது கங்குலியின் ‘வாழ்க்கை’ கதையா?!
கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திக் கணிசமான திரைப்படங்கள் இந்தியாவில் வந்திருக்கின்றன. தமிழிலும் சென்னை 600028, ஐ லவ்யூடா, ஜீவா, லால் சலாம் போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் இருந்து எந்த வகையில் வேறுபட்டு நிற்கப் போகிறது என்ற கேள்விக்கு உள்ளானது ‘டெஸ்ட்’ திரைப்படம். தயாரிப்பாளர் சஷிகாந்த் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமாகிற இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே அந்த கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டது. அதேநேரத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற தகவல் எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியது. […]
சிக்கந்தர் – முருகதாஸ் படம்னு சொல்றாங்க..!
தமிழ் சினிமாவில் ‘தீனா’ மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். பிறகு ‘ரமணா’, ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ என்று பல வெற்றிப்படங்கள் தந்திருக்கிறார். இதைத் தவிர்த்து தெலுங்கு, இந்தியிலும் படங்கள் இயக்கியிருக்கிறார். அவற்றில் இந்தி ‘கஜினி’ குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அப்படிப்பட்ட ஒரு இயக்குனர் ‘தர்பார்’ படத்திற்குப் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து ‘சிக்கந்தர்’ படத்தை இந்தியில் தந்திருக்கிறார். இதில் நாயகன் நாயகியாக சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றனர். இது எப்படிப்பட்ட எதிர்பார்ப்பை நமக்குள் […]
தி டோர் – படத்தைக் காக்கிறதா பாவனாவின் இருப்பு?
மிஷ்கினின் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலமாகத் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பாவனா. அந்த காலகட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துகள், ஜெயம்கொண்டான் என்று தொடர்ந்து நடித்து வந்தவர் பின்னர் ‘அசல்’ படத்தில் அஜித்தோடு ஜோடி சேர்ந்தார். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் அவர் நடித்துள்ள ‘தி டோர்’ படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. பாவனாவின் சகோதரர் ஜெய்தேவ் இதனை இயக்கியிருக்கிறார். ’தி டோர்’ படத்தின் ட்ரெய்லர் ஆனது […]