தினம் ஒரு செய்தி

31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

எவரெஸ்ட் மேன் என அழைக்கப்படும் நேபாள நாட்டைச் சேர்ந்த காமி ரீட்டா 31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.

புத்தகம் வாசிப்பதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?

புத்தகம் – மனிதனின் மிகப்பெரிய நண்பன். இவை மனித வாழ்வில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதுவரை சாதித்த பலர் புத்தக வாசிப்பாளர்களாகவே இருந்துள்ளனர். எனவே, புத்தகம் படித்தால் உண்மையிலேயே சாதிக்கலாமா? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.‌ இந்தக் கேள்விக்கு ஒரே வார்த்தையில் முடியும், முடியாது என பதிலளிப்பது கடினம். ஏனெனில் சாதிப்பது என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கை இலக்குகள் மற்றும் அவர்களின் முயற்சிகளைந் பொறுத்தது. இருப்பினும், புத்தகம் படிப்பதன் மூலம் நம் அறிவு, திறன்கள் மற்றும் வாழ்க்கை பற்றிய […]

தொண்டர்களை நேசித்த தலைவர்!

தொண்டர்கள்மேல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும்தான் அ.தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தின் அடிப்படை.

பயணம் என்பது வாழ்க்கையின் திருப்புமுனை!

மே 23: தேசிய சாலைப் பயண தினம்: பாதுகாப்பான பயணம் என்பது எல்லோரும் விரும்பக்கூடிய ஒன்று. பொதுவாக பயணம் என்பது ஜாலியாகவும், ஒரு சிலருக்கு துக்கமாகவும் அமைந்துவிடுகிறது. நாம் பயணங்கள் மேற்கொள்ளும்போது அடிப்படைத் தேவையான எல்லா பொருட்களும் இருக்கின்றதா என்பதை சரி பார்த்துக் கொள்வது முக்கியம். ஆடை முதல் அவரசர மருந்துகள் எல்லாம் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து வைக்க வேண்டும். பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தும் விதமாக, இன்று (மே 23) தேசிய சாலை பயண தினம் கொண்டாடப்படுகிறது. […]

ஆமை வாழ்வு எளிதல்ல…!

’ஆளு ஆமை மாதிரி.. ரொம்ப காலமா இந்த பூமியில இருக்காப்ல..’ என்று ‘சுந்தரபாண்டியன்’னில் வரும் சூரி போலச் சிலர் கலாய்ப்பதுண்டு. வயதில் மூத்தவர்களை மட்டுமல்ல, அது போலத் தோற்றம் தருபவர்களும் அப்படிக் கிண்டலுக்கு ஆளாவார்கள். அதே நேரத்தில், ‘ஆமை நுழைஞ்ச வீடு மாதிரி’ என்று சிலரது வருகையை அவமானப்படுத்தவும் அந்த விலங்கைச் சுட்டிக்காட்டுவதுண்டு. ஆனால், இது போன்ற எந்தவொரு விஷயத்தையும் ஏற்றிக்கொள்ளாமல் டைனோசர் காலம் தொட்டு சுமார் 26 கோடி ஆண்டுகளாக இந்தப் பூமியில் வாழ்ந்து வருகின்றன […]

பல்லுயிர்ப் பெருக்கத்திற்குத் துணை நிற்போம்!

மே 22 – சர்வதேச பல்லுயிர்ப் பெருக்க தினம் ’நம்மோட குப்பைய கொண்டுபோய் பக்கத்து மாநிலத்துல கொட்டுறதுனால மட்டும் சுற்றுச்சூழல் பாதிக்காம இருந்திடுமா.. அந்த குப்பை என்ன அந்தரத்துலயா இருக்கு.. இந்த பூமியில தானே இருக்கும்’ – இந்த வசனம் சமீபத்தில் வந்த ‘ரசவாதி’ படத்தில் நாயகன் அர்ஜுன் தாஸ் பேசுவதாக அமைந்திருக்கும். இயக்குனர் சாந்தகுமார் அந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர். அவர் எந்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் என்பது தினசரிகளைத் தொடர்ந்து படிக்கிற ஒருவரால் எளிதில் புரிந்துகொள்ள […]