சமூகம்

உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்!

உங்கள் மதிற்சுவருக்கு அப்பால் இருக்கிற அழகுகளை உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்; அருகே சென்று அவ்வழகின் உண்மைத் தன்மையை பரிசோதிக்க எண்ணாதீர்கள்; அது வானவில்லை கையில் பிடித்துப் பார்ப்பது போன்றது; நீங்கள் தூரத்திலிருந்து பார்த்த சூரியகாந்தி வயலில் கோடைப் பாம்பொன்று நெளிந்து கொண்டிருக்கலாம்; நீங்கள் தூரத்திலிருந்து பார்த்த செம்பருத்தியின் நிழலில் சருகுகள் கொட்டிக் கிடக்கலாம்; நீங்கள் தூரத்திலுருந்து மகிழ்ந்த நதிக்கரையில் ஓர் இடுகாடு இருக்கலாம்; நீங்கள் தூரத்திலிருந்து ரசித்த மரத்தின் கிளையில் ஓர் எலும்புக்கூடு தொங்கலாம்; தூரத்துப் […]

விட்டுச் சென்ற படைப்புகளும் கனவுகளும்…!

எழுபத்தைந்து வயதிலும் முதிர்ச்சியின் சலிப்பும், அலுத்துக்கொள்ளும் இயல்புமில்லாமல், இறுதிவரை எழுதிக் கொண்டிருந்த படைப்பாளியான சுந்தர ராமசாமி உடல்நலக் குறைவேற்பட்டு மறைந்திருக்கிறார். சிறுவயதில் இளம்பிள்ளைவாதத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் உடலுடன் துவங்கிய போராட்டம். வெவ்வேறு காலகட்டங்களில் அவருடைய இறுதிக்காலம் வரையிலும் தொடர்ந்திருக்கிறது. பதினெட்டு வயதில் தமிழை சுயமாகக் கற்றுக் கொண்டு எழுதத் துவங்கி புதுமைப்பித்தனின் அடிச்சுவட்டைப் பிடித்து மேலேறித் தனக்கென்று வளமான மொழிநடையை உருவாக்கிப் படைப்புகளின் மூலம் செழுமைப்படுத்தியவர். நேர்ப்பேச்சின் மூலமும், எழுத்தின் மூலமும் தொடர்ந்து படைப்பாளிகளுக்குத் தூண்டுதலை ஏற்படுத்திக் […]

கடைசி நாளில் கவனமாக இருங்கள்?!

இந்த செய்தி, 17 ஆண்டுகள் படித்து முடித்து பள்ளிக்கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள் குறித்து சமூகத்தில் எப்படிப்பட்ட கருத்தை விதைக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.

மனதின் விஸ்வரூபத்தை மனிதர்களுக்குக் காட்டிய ஹுசைனி!

ஷிஹான் ஹுசைனி. ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைபடாத அல்லது அடைக்க முடியாத தமிழ் ஆளுமைகளில் ஒருவர். எளிய பின்னணியில் இருந்து வந்து மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தவர். எத்தனை வயதானாலும் கற்றலுக்கு முக்கியத்துவம் தந்தவர். எத்தகைய பின்னடைவுகளில் இருந்தும் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை நமக்குள் விதைத்துக் கொண்டிருப்பவர். அவருடைய வாழ்வைப் பல அத்தியாயங்களாகப் பிரித்தால், ஒவ்வொன்றின் முடிவிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றிகள் மிளிர்வதைக் காண முடியும். அவர் எதிர்கொண்ட தோல்விகளின் சதவிகிதம் மிகச்சொற்பமாகத்தான் […]

நாடு முழுவதும் 837 நாடோடி இனங்கள்!

விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன், சாமானிய மக்கள் நலன் சார்ந்தும், தொகுதியின் மேம்பாடு குறித்தும் மக்களவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். அந்த வகையில், அண்மையில் மக்களவையில் பேசிய முனைவர் தொல்.திருமாவளவன், இடம்பெயரும் பழங்குடி மக்கள் மற்றும் நாடோடி மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்தான தரவுகள் ஏதேனும் அரசிடம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் வெர்மா எழுத்துப்பூர்வமாக விடையளித்துள்ளார். அதில், “நாடு முழுவதும் 837 […]

டி.எஸ்.பாலையா: என்றுமே மகத்தான கலைஞன்தான்!

தமிழ் சினிமாவில் அந்த நடிகரை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது, தமிழகத்து மிகசிறந்த நடிகர்கள் வரிசையில் அவருக்கு எந்நாளும் இடம் உண்டு, சிவாஜி கணேசனுக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் நிகரான இடம் அது. அந்த அற்புத நடிகர் ராமசந்திரன் நடித்த முதல் படமான சதிலீலாவதியிலே நடித்தார், எம்.எஸ் சுப்புலட்சுமியுடன் மீரா படத்தில் நடித்தார். அதாவது 1940-களிலே அறிமுகம் ஆகியிருந்தார், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார். அவர்தான் திருநெல்வேலி சுப்பிரமணியன் பாலைய்யா. ஆம், நாகர்கோவில் – என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற பலரைக் கொடுத்தாலும் நெல்லைக் கொடுத்த […]