சமூகத்தோடு ஒன்றியிருக்கும் படைப்பாளன்!
அலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்சின் நோபல் உரையில் ஒரு பகுதி: “தன்னுடன் வாழும் மனிதர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் ஒதுங்கி நின்று அவர்களைக் கணிக்க வந்த அந்நிய நீதிபதி அல்ல எழுத்தாளன். அவன் நாடும் அவன் மக்களும் இழைக்கும் தீங்குகளுக்கெல்லாம் அவனும் ஒரு கூட்டுச் சதிகாரன். அவன் நாட்டு டாங்கிகள் இன்னொரு நாட்டு சல்லைகளை ரத்த வெள்ளாத்தில் ஆழ்த்துமானால் அந்த எழுத்தாளனின் முகத்திலும் என்றென்றும் அழியாத ரத்தக் கறைகள் தெரித்திருக்கும். ஒரு துரதிருஷ்டம் வாய்ந்த இரவிலொரு எழுத்தாளனின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை […]
தொல் தமிழரின் நீர்ப் பாசன நுண்பார்வை!
நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் பாசன அறிவியலையும் அவ்வாறு பயன்படுத்துவதற்கான நிலையான அணைக்கட்டைக் கட்டும் கட்டுமான அறிவியலையும் நம் முன்னோர் நன்கு அறிந்திருந்தனர்.
நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே!
நில நடுக்கம் ஏற்பட்டு, இடம் பெயர்ந்தாலும் நீ சொன்ன சொல்லில் இருந்து தவறிச் செல்லாதே என்கிறார் புலவர். இது மன்னனுக்கான அறிவுரை என்றாலும் அனைத்து மக்களுக்குமான அறிவுரையுமாகும்.
இன்னும் பதியப்படாத பதிவெண் பலகையாக…!
ரசிக்கப்பட்ட கவிதை: சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் வாகன எண்களால் நிரம்பிவழிகிறாள் எங்கேயோ பார்த்த நினைவில் பெயரை விசாரித்தேன் TN 09 AV 5437 என்று கண்சுருக்கி நாக்கைக் கடித்துக்கொள்கிறாள் கீழே விழுந்த கைக்குட்டையை எடுத்து உதறுகிறாள் அதிலிருந்தும் உதிர்கின்றன சில வாகன எண்கள் தனக்கு முன்னால் கணினித்திரையில் வாகன எண்களைச் சரிபார்த்தபடி தண்ணீர் குடிக்கிறாள் அவள் உண்ணுவதும்கூட எண்ணும் எழுத்தும்தான் போல மார்பில் பச்சைகுத்தப்பட்ட எண்களை அழிக்க நினைத்தபோது இரத்தம் கசிய கனவுகளிலிருந்து அவள் திடுக்கிட்டு எழுந்த […]
கவிஞர்கள் பார்வையில் கன்னியரின் கண்கள்!
இங்கிலாந்தின் டெவன்ஷயர் பகுதியின் கோமகளாக இருந்தவர் ஜார்ஜியானா. ஒருமுறை அவர் ஒய்யாரமாக கோச் வண்டியில் இருந்து இறங்கிய நேரம். ஐயர்லாந்தைச் சேர்ந்த ஒரு துப்புரவுத் தொழிலாளி கோமகளின் அழகில் மயங்கிப்போய் இப்படிச் சொன்னாராம். “ஓ மை லேடி! இது என்ன கண்கள்? உங்கள் கண்கள் மூலம் என் புகைக்குழாயை ஒருமுறை நான் பற்ற வைத்துக் கொள்ளலாமா?” பிற்காலத்தில் கோமகள் ஜார்ஜியானா இந்த வர்ணனையைச் சொல்லிச் சொல்லி வியந்தாராம். “கவிஞர்னு சொல்லிக்கிட்டு இதுவரை எத்தனையோ பேர் என்னோட கண்ணழகைப் […]
அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை!
ஒவ்வொருவருமே, செல்வமோ, செல்வாக்கோ அவை தரும் சிறப்புகளோ வெற்றியல்ல; அறநெறியிலான வாழ்வே வெற்றி தரும் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.