சுப்மன் கில்: இந்தியக் கிரிக்கெட்டின் புதிய மகாராஜா!
சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் 37-வது கேப்டனாக இன்று முடிசூடி இருக்கிறார் சுப்மன் கில்.
வள்ளுவரின் குரல் கலகக் குரல்தானே!
இளங்கோவும், கம்பரும் ஆக்கியளித்த பேரியலக்கியங்களில் ‘தமிழ்’ என்ற அடையாளத்துக்குள்ளேயே அவர்களது முகம் தெரியும்.
கவிஞர் வாலி இலக்கியவாதியாக எப்போது பார்க்கப்பட்டார்?
என் மகள் திருமணத்தின்போது காவியக் கவிஞர் அண்ணன் வாலி இல்லையே என்ற குறையைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை. என் மகளை சிறு குழந்தையிலிருந்தே நன்கறிவார். “எப்போது திருமணம், எப்போது திருமணம்” என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார். ஜாதகம் பொருந்தவில்லையென்று நான் சொன்னபோது “ஜோதிடம் தனை இகழ்” என்று பாரதியாரே சொல்லியிருக்கிறார். ஆகவே, “ஜாதகத்தை நம்பாதே” என்றும் சொல்வார். அப்படிப்பட்ட சிறப்புக்குரியவர் அண்ணன் வாலி. அவர் திரைப்பாடல்கள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தபோது, இலக்கியவாதிகள் கண்ணதாசனுக்குக் கொடுத்த […]
ஏஸ் – ஸ்வீட் சர்ப்ரைஸ்!
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி ஏமாற்றிய திரைப்படங்கள் ஓராயிரம். அதனாலேயே, இப்போதெல்லாம் ‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தியேட்டருக்கு வந்தா இந்த படம் ஆச்சர்யப்படுத்தும்’ என்று சொல்கிற ‘ட்ரெண்ட்’ தொடங்கியிருக்கிறது. சில வேளைகளில் அது பலன் தந்திருப்பதைக் கடந்த காலத் திரை வரலாறு சொல்கிறது. ‘மகாராஜா’ எனும் பெரு வெற்றியைத் தந்த விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிற நேரத்தில் இதனைச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ’ஏஸ்’ கதை! மலேசியாவுக்கு வந்திறங்குகிறார் ஒரு நபர் (விஜய் […]
உணர்வுக்கு முதுமையில்லை!
வாசிப்பின் ருசி: நமக்கு எப்போது வயதாகத் தொடங்குகிறது? பொதுவாக 65 வயதையொட்டி, மருத்துவத் தேவைகள் அவசியாகும்போது, நமக்கு முதுமை வரத் தொடங்குகிறது என சமூகம் கருதுகிறது. ஆனால், பிறந்தது முதலே நமக்கு வயதாக ஆரம்பித்துவிடுகிறது. இப்போதுகூட வயதாகிக் கொண்டுதான் இருக்கிறது, நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அதை உணர்கிறோம். நாம் எல்லோருமே நம் வயதைவிட இளமையாகத்தான் உணர்கிறோம். ஏனென்றால் உணர்வுக்கு வயதாவதில்லை. – இஸபெல் அலெண்டே (லத்தின் அமெரிக்க எழுத்தாளர்)
ஒருவரை மகிழ்விக்க முகமலர்ச்சியே போதுமானது!
தாய் சிலேட்: பல்லாயிரம் சொற்களைவிட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார்! – வள்ளலார்