கதம்பம்

இலக்கும் உழைப்பும் வெற்றிக்கு அடிப்படை!

 தாய் சிலேட்:  வெற்றி என்பது ஒரு சதவிகித குறிக்கோள், 99 சதவிகித உழைப்பால் உருவாகக் கூடியது! – தாமஸ் ஆல்வா எடிசன்

பேச்சைவிட செயல்களே நம் மதிப்பை அதிகரிக்கும்!

இன்றைய நச்:  அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது; அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது; அதிகம் செயல்படுபவனையே கைக்கூப்பி வணங்குகிறது! – கன்பூசியஸ் #Confucius_thoughts #கன்பூசியஸின்_தத்துவங்கள்

விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்பு!

ஊர் சுற்றி குறிப்புகள்: சென்னை பிரஸ் கிளப்பில் விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கை, கால்கள் விலங்கிட்டு அமெரிக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததைக் கண்டிக்கும் விதத்தில் ஒரு கார்ட்டூனை ஆனந்த விகடன் இணையதளம் வெளியிட்டிருந்தது. வெளியிட்ட சில மணி நேரங்களுக்குள் ஒட்டுமொத்த விகடன் இணையதளமே முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட மறுநாள், “ஏன் முடக்கக் கூடாது” […]

தகுதியற்ற விமர்சனங்களைத் தவிர்ப்போம்!

படித்ததில் ரசித்தது: நீ தகுதியானவனாக இருக்க வேண்டும் என்றால், தகுதியற்றவர்களின் விமர்சனங்களுக்கு, பதில் அளிப்பதை தவிர்த்து விடு! எல்லோரின் செயல்களையும், விமர்சிக்க, இங்கு ஒரு கூட்டம் உள்ளது, அதை நீ கண்டுகொள்ளாமல் இருந்தால், உன் வாழ்க்கைக்கு நல்லது!! மற்றவரோடு ஒப்பிட்டு, உன்னை குறை சொல்பவர் சொல்லிக்கொண்டே இருக்கட்டும், “என்னைப் பற்றி எனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு முன்னேறி செல். நன்றி: சிந்தனையாளர்கள் பக்கம் முகநூல் பதிவு

சிறப்பாக வாழ முயற்சி செய்யுங்கள்!

இன்றைய நச்:                          கஷ்டமாக இருக்கிறது, ஒன்றும் முடியவில்லை என்பன போன்ற எதிர்மறையான வார்த்தைகளை ஒருபோதும் பேசாதீர்கள்; இன்னும் சிறப்பாக வாழ்வேன் அதற்கான சூழ்நிலைகளையும் நேர்மையான பாதைகளையும் நானே முயற்சி செய்து ஏற்படுத்துவேன் என்று கூறுங்கள்; வரம்பில்லா ஆற்றல் பெற்று மிகப் பெரிய செல்வந்தராக வாழ்வில் உயர்வீர்கள்! – சார்லஸ் பில்மோர்

உறுதியும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்!

தாய் சிலேட்: உறுதியும் உழைப்பும் இருந்தால், வெற்றி நிச்சயம்! – ஷெல்லி