‘முதல் மரியாதை’க்குக் கிடைத்த ‘முதல்’ மரியாதை!
அருமை நிழல்: கிராமத்துக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் பாரதிராஜா எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘முதல் மரியாதை’. 1985 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெளியானபோது மிகக் குறைந்த அளவிலேயே ரசிகர்கள் காண வந்த நிலையில் ஒரு சில வாரங்களிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரிய வெற்றியடைந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. முதல் மரியாதை படத் தயாரிப்பின்போது நடிகர் திலகத்துக்கு மாலை அணிவித்து (முதல்) மரியாதை […]
வாழ்வின் மிக உயரிய பண்பு எளிமைதான்!
இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி, கட்டிடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் மற்றும் சிற்பி போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார். குறிப்பாக, மோனாலிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் போன்ற உலக புகழ்பெற்ற ஓவியங்களைப் படைத்தவர். கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் கொண்டவர். மிகச்சிறந்த கற்பனை வளம் உடையவரான டாவின்சி உடற்கூற்றியல் மற்றும் வானியல் துறைகளிலும் பங்களித்துள்ளார். தனது பன்முக ஆற்றலால் பிரபஞ்ச மனிதர் என்று […]
‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பில் குழுவினர்!
அருமை நிழல்: ‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன், இயக்குநர்கள் முக்தா வி.சீனிவாசன், சி.வி. ராஜேந்திரன், தயாரிப்பாளரும் நடிகருமான பாலாஜி, பண்டரிபாய், ஏ.சகுந்தலா, காந்திமதி, கே.ஆர். விஜயா ஆகியோர் ஒன்றாக எடுத்துக் கொண்ட படம். – நன்றி: ‘பிலிமாலயா’ சினிமா இதழ்
நாசியைத் தொடாத வாசனை!
கொடிக்குக் கொடி கைதுழாவி மலர்களை கொய்தெடுக்கையில் எவ்வித உணர்கிறீர்கள் என்றும் வயிறு காந்துகையில் வாசனை நாசியைத் தொடுவதில்லை – யுகபாரதி.
பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்!
தனக்கு வரும் இன்பத்தை விரும்பாமல் தன் சுற்றத்தார்க்கு ஏற்படும் துன்பத்தைத் துடைப்பதில் கருத்து செலுத்திச் செயலாற்றுபவன் அவர்களைத் தாங்கும் தூணாக விளங்குவான் என்கிறார் வள்ளுவர்.
சமூக மாற்றம்தான் சிந்தனை மாற்றத்தைக் கொடுக்கும்!
தேர்தல்களால் அரசாங்கத்தைத் தான் மாற்ற முடியும். மக்களின் சிந்தனையை மாற்ற முடியாது. சமூக மாற்றங்களால்தான் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அதைத்தான் தந்தை பெரியார் செய்தார். சமூக அமைப்பை மாற்றி அமைப்பதற்கும், சமூக நீதியைக் கொண்டு வருவதற்கும் பெரியார் செய்துள்ள மிகப்பெரும் தொண்டு பிரதமர்களாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் செய்ய முடியாததாகும். – முன்னாள் பிரதமர் வி.பி சிங் டிசம்பர் 29, 1992-ல் திருச்சியில் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து. நன்றி: தி […]