உணவே மருந்து மருந்தே உணவு!
சீரகம்: சீர் + அகம் சீரகம் அகத்தினை சுத்தப்படுத்துவதனால் இதனை சீரகம் என அழைப்பதுண்டு. உணவே மருந்து மருந்தே உணவு என்னும் சூத்திரத்தை சித்தர்கள் கூறியுள்ளனர். அதில் சீரகத்திற்கு முக்கிய பங்குண்டு. சீரகம் அளவில் சிறிதாகவும் பார்ப்பதற்கு கவர்ச்சி இல்லாமலும் இருக்கும். ஆனால் உலகின் மூத்த மணமூட்டி சீரகமாகும். சீரகம் ஒரு மணமூட்டி மட்டுமல்ல உலகை ஆளும் மருத்துவ உணவு. முதல் முதலில் கிரேக்க நாட்டில் இருந்து தான் உலகம் எங்கும் பரவியது.சித்த மருத்துவ இலக்கியமான தேரன் […]
பாரம்பரிய உணவுமுறையின் மதிப்பை உணர்வோம்!
மேற்கத்திய நாடுகள் வெந்தயத்தினை ரொட்டிகளிலும் மற்றும் கேக்குகளிலும் நவீன தொழில்நுட்ப முறையை கையாண்டு பயன்படுத்தி வருகின்றனர்.
இயற்கையின் அடிப்படையே இடமிருந்து வலம்தான்!
பூங்காவில் கடிகாரச் சுற்றுத் திசையில் அதாவது வலஞ்சுழியாக நடைப்பயிற்சி செய்பவர்கள்தான் அதிகம். (நடைபயிற்சி நாயகர்களில் பெரும்பான்மையோர் வலஞ்சுழிக்காரர்கள்தான்) அந்தநேரம் இடஞ்சுழியாக அதாவது எதிர்ச்சுற்று சுற்றி வருபவர்களைப் பார்த்தால் கடுப்பாக இருக்கும். ‘எல்லோருக்கும் ஒருவழி என்றால் இடும்பனுக்குத் தனிவழி’ என்ற பழமொழி கூட அந்த மைனாரிட்டி மக்களைப் பார்க்கும் போது நினைவுக்கு வரும். ஆனால், இடஞ்சுழியாக நடைபயிற்சி செய்வதுதான் சரியாம். ஒலிம்பிக் ஓட்டப்போட்டிகளில் பார்த்திருப்பீர்கள். அங்கே ஓவல் என்ற நீள்வட்ட வடிவ ஓடுபாதையில் ஓடும் வீரர்கள், கடிகார சுற்றுக்கு […]
இளமையோடு இருக்க காலையில் தண்ணீர் அருந்துங்கள்!
இரவில் படுக்கச் செல்வதற்குச் சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் முன்பாக உணவு உண்ணும் பழக்கம் இருந்தால் போதும்; தூங்குவதற்கு முன்பாகச் சிறிதளவு தண்ணீர் அருந்தும் பழக்கம் தானாக உருவாகும்.
பலவீனமாக உணர்கிறீர்களா? இதுவும் காரணமாக இருக்கலாம்!
இரும்பு, வைட்டமின் பி12 அல்லது வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் ரத்த சோகை, ஆற்றல் குறைந்தல் மற்றும் தசை பலவீனம் ஏற்படலாம். உதாரணமாக, இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகை திசுக்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்கிறது. இதனால் சோர்வு மற்றும் சோம்பல் ஏற்படுகிறது. தூக்கமின்மை அல்லது அதிக உடல் உழைப்பு போன்ற தற்காலிக காரணிகளால் அவ்வப்போது சோர்வு ஏற்படலாம் என்றாலும், தொடர்ச்சியான பலவீனம் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து, ஊட்டச்சத்து குறைபாடுகள், நாள்பட்ட நோய்கள் அல்லது மனநல […]
தமிழ்நாட்டில் புற்றுநோயால் சுமார் 2,50,000 பேர் பாதிப்பு!
புற்றுநோய் பற்றி, நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான சில விஷயங்கள், இங்கே: * உலக அளவில் ஆண்டுதோறும் 4 மில்லியன் மக்கள் புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். இவையன்றி இந்தியாவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும் தமிழகத்தில் சுமார் 2,50,000 பேர் பாதிக்கப்படுவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உடலில் கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல்களின் பிரிதலே புற்றுநோயாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி கட்டிகளை உருவாக்கி திசுக்களை அழிக்கிறது. […]