மழைக்காக வானத்த எதிர்பார்த்து கழுத்து வலி வந்ததுதான் மிச்சம்!
ஆடி மாசம் பிறந்து சில நாட்களாகி விட்டன. இன்னும் வெய்யில் குறைந்தபாடில்லை. வெக்கை தாங்க முடியவில்லை. வீசும் அனல் காற்று அக்னியாக பொசுக்குகிறது. குற்றாலத்தில் போதுமான தண்ணீர் விழவில்லை. தாமிரபரணியில் வாய்க்கால் மாதிரிதான் தண்ணீர் செல்கிறது. வைகாசி கடைசி ஆனி முதலிலேயே சாரல் ஆரம்பித்துவிடும். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சாரல், அணிந்திருக்கும் ஆடைகள் நனைகிற அளவுக்கு அப்படியே ஜில்லுனு தெளிக்கும். ஆடி மாசம் முழுவதும் மே காத்து அலைக்கழிக்கும். கூரை வீடுகள், ஓலை வீடுகள் பிய்த்துக் கொண்டு […]
மேகதாது பிரச்சனை : தொடர்ந்து வலுக்கும் சர்ச்சைகள்!
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி, பாஜக ஆட்சியாக இருந்தாலும் சரி, இப்பிரச்சனையை சுமூகமாக முடிக்க முடியாமல், ஏதோ ஒரு தடையை மத்திய அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருவதே நீர் மேலாண்மை சார்ந்த வரலாறாக உள்ளது.
தடைகளைக் கடந்து வெற்றியைத் தொட்ட ராஜா!
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு பளுதூக்கும் போட்டியில், ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் 26 வயதாகும் ராஜா முத்துப்பாண்டி. இந்திய ரயில்வே ஊழியரான ராஜா, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 12-ல் பிறந்தார். சிறு வயதிலேயே பளுதூக்கும் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால், முறையான பயிற்சிகளை மேற்கொண்டு ஜூனியர் பிரிவுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்தார். 2017-ம் ஆண்டு காமன்வெல்த் இளையோர், ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் […]
பூமிக்கு அடியில் ஒரு நட்சத்திர வானம்!
அது பூமிக்கு அடியில் உருவான ஒரு நட்சத்திர வானம் போல இருக்கும். அதனால்தான் பலர் இதை “Underground Starry Sky” என்று அழைக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகர்!
வாத்தியக் கருவியில், சிறிய கருவி, பெரிய கருவி எனும் பேதங்களெல்லாம் இல்லை. கலைஞர்களிலும் அப்படித்தான். இந்தத் தலைமுறையினருக்கு அந்தப் பாடகரைத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், கடந்த தலைமுறையினருக்கு நன்றாகவே பரிச்சயப்பட்ட தனித்துவமிக்க குரல் அவருடையது. வாழ்வியல் தத்துவங்களை இவரின் குரல் வழியே கேட்டால், வாழ்க்கைப் பாடத்தை கன்னத்தில் அறைந்து சொல்லித்தருவது போல் இருக்காமல், செல்லமாக காது திருகி சொல்லித் தருவது மாதிரியான வசீகரக் குரல் அது. அந்த இலவம் பஞ்சுக் குரலுக்கு சொந்தக்காரரின் பெயர் – […]
எழுத்தாளர் வாஸந்திக்கு எத்தனை முகங்கள்?
நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக் கட்டுரை நூல்கள் என எழுத்தாளர் வாஸந்தியின் ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இவர் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன. கலாசார […]