நேற்றைய நிழல்

அரங்கு நிறைந்த விழாவான ‘கவிக்கோ’ ஆவணப்பட வெளியீடு!

ஞாயிறன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கில் கவிக்கோ ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு கலந்துரையாடலும் நடைபெற்றது. கவிஞர் இந்திரன், கவிஞர் – இயக்குனர் சீனு ராமசாமி, கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோருடன் படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் சிஜே ராஜ்குமார், இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோருடன் ஆவணப்படத்தின் இயக்குனர் பிருந்தாசாரதியும் கலந்துகொண்டார். ஆவணப்படம் அனைவரையும் கவர்ந்ததுடன் அதன் நாயகரான கவிக்கோவைப் பற்றியும் அவரது கவி ஆளுமை குறித்தும் பலரிடமிருந்தும் கருத்துக்கள் ஊறிய வண்ணம் இருந்தன. இயக்குனர் […]

ஊரில் அல்லி பூத்திருக்கிறது!

அறுவடைக் காலம். ஊரெங்கும் நெல் வயல்கள் கதிர் முற்றி தலைசாய்ந்து மஞ்சளாகப் பூத்திருந்தன. உள்ளூர் சாலைகளில் அறுவடை எந்திரங்கள். ஓர் அறுவடை நாளில்தான் பேரன்புமிக்க அப்பா எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறார். ஊருக்கு அருகிலுள்ள வெள்ளையாற்றின் கரையில் மஞ்சளாக பூத்த வயல்களுக்கு நடுவே நீளும் சாலையில் அப்பா சைக்கிளில் வரும் காட்சி சித்திரமாக விரிகிறது. எப்போதும் அவர் வீடு திரும்பும் சாலை அதுதான். நண்பகல், மதியம், மாலை, இரவு, நள்ளிரவு, கருக்கல், அதிகாலை என எல்லா நேரங்களிலும் சைக்கிள் […]

நான் உனக்கு கவிஞரா?

ஒருமுறை கவிஞரது இளைய மகன் அண்ணாதுரை, வெளியில் சென்றிருந்த அப்பா வீட்டுக்குத் திரும்பியபோது ‘வாங்க கவிஞரே’ என்று வேடிக்கையாக அழைத்துவிட்டான்! அவ்வளவுதான். மகனின்மேல் அப்பாவுக்குக் கோபம் கொதித்து வந்துவிட்டது. “ஏண்டா! என்ன? கவிஞரா! நான் உனக்குக் கவிஞராடா?” என்று கடிந்து கொண்டவராய் உள்ளே போய்விட்டார். இது சம்பந்தமாக கவிஞர் ஒரு வேடிக்கையான கதை ஒன்றைச் சொன்னார். விக்டோரியா மகாராணி ஒரு நாள் இரவு தனது அலுவல்களை எல்லாம் முடித்துக்கொண்டு படுக்கையறைக்கு வந்தாராம். அவரது கணவர் படுக்கையறையைத் தாழிட்டுக் […]

தன்னலமற்றத் தலைவருடன் நடிகர் திலகத்தின் குடும்பம்!

அருமை நிழல்: நடிகர் திலகத்தின் ‘அன்னை இல்லத்தில்’ பெருந்தலைவர் காமராசர் அவர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் அவரது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் ஆகியோர் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம். நன்றி : முகநூல் பதிவு  

ஈ.வெ.ரா.வுக்கு வெறுப்புணர்ச்சி இருந்ததில்லை!

“திரு. ஈ.வெ.ரா. அவருடைய பல அபிப்பிராயங்களோடு நம்மால் ஒத்துப்போக முடியவில்லை என்றாலும், ஜாதி பேதங்களை ஒழிக்கத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற முறையில் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இன்று ஒரு கொள்கை, நாளை ஒரு கொள்கை என்று அலையும் அரசியல்வாதிகள் எங்கும் பரந்து கிடக்கும் சூழ்நிலையில், திரு.ஈ.வெ.ரா மட்டும் தனது கொள்கைகளில் கடைசி வரையில் அசையாத பிடிப்புக் கொண்டிருந்தார். ஊருக்குத் தகுந்தாற் போல், மேடைக்குத் தகுந்தாற் போல் தங்கள் பேச்சுக்களைச் சிறிதும் வெட்கம் இல்லாமல் […]

வானொலிக்கான வாசிப்பு!

அருமை நிழல்: ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் தனது குழுவினருடன் வானொலி நிகழ்ச்சிக்காக வாசித்தபோது…! அந்தப் புகைப்படம் வெளிவந்ததும் வானொலி (7.8.1942) இதழில் தான். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி