நாட்டு நடப்பு

சென்னைக்கு ஏன் இந்த நிலைமை?

மக்கள் மனதின் குரல்: “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” என்று தான் நடித்த திரைப்படத்தில் சென்னை நகர சாலைகளைக் கடந்த படி, பாடுகிற படி நடித்திருப்பார் நாகேஷ். சென்னை என்கிற தலைப்பிலேயே திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கி வளர்க்கப்பட்ட சென்னையின் தற்போதைய பரப்பளவு 426 சதுர கிலோமீட்டர். இதில் சென்னை மாநகராட்சி கணக்குப்படி ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் வாழ்கிறவர்கள் 15,840 பேர். 2022-ம் ஆண்டு கணக்குப்படி நான்கு மாநகராட்சிகள், 1000-க்கும் மேற்பட்ட கிராமங்கள். சென்னை […]

சமூகத்தின் சுமைகளைப் பகிர்ந்து கொள்வோம்!

உலகம் முழுவதும் 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20-ம் நாளன்று, ‘உலக சமூக நீதி நாள்’ (World Day of Social Justice) கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக, வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. சமூக நீதி (Social Justice) என்ற கருத்தாக்கமானது தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான நியாயமான உறவைக் குறிக்கிறது. சமூக வேறுபாடுகளை பொதுவாக, பொருளாதாரப் பரவல், தனிப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சமூக செல்வாக்கின் மூலம் […]

விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்பு!

ஊர் சுற்றி குறிப்புகள்: சென்னை பிரஸ் கிளப்பில் விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கை, கால்கள் விலங்கிட்டு அமெரிக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததைக் கண்டிக்கும் விதத்தில் ஒரு கார்ட்டூனை ஆனந்த விகடன் இணையதளம் வெளியிட்டிருந்தது. வெளியிட்ட சில மணி நேரங்களுக்குள் ஒட்டுமொத்த விகடன் இணையதளமே முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட மறுநாள், “ஏன் முடக்கக் கூடாது” […]

சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.45 கோடி!

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வ தேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அன்பின் வழியது உயிர்நிலை!

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி பிரசித்தமோ அதேபோல் மற்றொரு நாளையும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள் என்றால், அது காதலர் தினம் என்று சொல்லலாம். வாலண்டைன்ஸ் டே என்று சொல்லப்படுகிற பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர்கள் மட்டுமன்றி, கணவன் – மனைவி, நண்பர்கள் எனப் பலரும் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்கின்றனர். அந்த நாளில் காதலர்கள் தங்களது இணையிடம் அன்பை வெளிப்படுத்தும்விதமாக வாழ்த்து அட்டைகள், பூக்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி சிறப்பிக்கின்றனர். அந்த வகையில் உலகின் சிறந்த […]

புல்லின் நுனியில் இருக்கும் உலகைப் புரிந்துகொண்ட நாள்!

தமிழர்களின் கலைப் பாராம்பரியத்தின் சாட்சியாக நெட்டி வேலைகள் இன்றும் தொடர்வதும், காலத்தின் ஓட்டத்தில் காணாமல்போகும் கலைகளுக்கு மத்தியில் இது உயிர்த்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.