தினம் ஒரு செய்தி

தீயணைப்பு வீரர்களை நேசத்துடன் நினைவு கூர்வோம்!

பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களின் அவசர எண்களை குறித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஒருங்கிணைந்த டோல் ஃப்ரீ எண்ணான 112 என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலியைத் தவிர!

“இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமை சங்கிலியைத் தவிர; அடைவதற்கோர் பொன்னுலகம் உண்டு” – புரட்சிகர மே தின நல்வாழ்த்துகள்.

மகிழ்ச்சியாக இருக்க, நடனம் ஆடுவோம்!

நடனத்தின் மாண்பினை நாம் புரிந்துகொண்டு பின்பற்றினாலே போதும்; வாழ்வின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும். வாருங்கள், நடனமாடுவோம்! களிப்பின் உச்சத்தில் திளைப்போம்!

மலேரியா இல்லா பூமியை உருவாக்குவோம்!

பூமியில் இருந்து இந்த நோய் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று எந்த நோய் குறித்தும் எவராலும் உறுதி கூற முடியாத நிலையில், மலேரியா போன்ற பொதுசுகாதாரத்திற்கு அச்சுறுத்தலான நோய்கள் குறித்த அறிதலும், அதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்வதுமே, அவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும்.

வாசித்தல் என்பது அறிவுப் பெருக்கத்தின் திறவுகோல்!

அறிவியல் என்ற இயங்குதளத்தின் அச்சாணி மூளையின் செயல்பாடே ஆகும். அந்த செயல்திறைனை அளிக்கும் அறிவே அதன் சக்தி. அந்த சக்தியை பெறுவதற்கான மூலம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் முதன்மையானது ஆகும்.

உலக அரங்கில் தமிழை ஒலிக்கச் செய்த மால்கம் ஆதிசேசய்யா!

யுனெஸ்கோவில் பெரிய பொறுப்பு வகித்து தமிழன்னைக்கு பல மணி மாலைகளைச் சூட்டி சிறப்பிக்க செய்த இந்த மால்கம் ஆதிசேசய்யாவை எத்தனை தமிழர்களுக்கு ஞாபகம் இருக்கப்போகிறது. பலன் கருதாது கர்ம வினை புரிபவர்கள் மேன்மக்களே.