உடல்நலம் பேண கல்லீரல் காப்போம்!
ஏப்ரல் 19 – உலக கல்லீரல் தினம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக உள்ளதா? செரிமானம் ஒழுங்காக நடைபெறுகிறதா? வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் இருக்கின்றனவா? கழிவுநீக்கம், வைட்டமின் சேமிப்பு போன்ற செயல்பாடுகளில் ஏதேனும் பிரச்சனையா? இது போன்ற கேள்விகளுக்குப் பதிலாக, ‘உங்கள் கல்லீரல் செயல்பாடு எப்படி இருக்கிறது’ என்று கேட்பது பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால், ’துரித உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர வேறொன்றும் அறிந்ததில்லை’ என்று சொல்லும் இளைய தலைமுறையின் உடல்நலத்தைக் காப்பதில் கல்லீரல் செயல்பாடு […]
ஈடு இணையற்ற மனிதர் ஐன்ஸ்டீன்!
ஐன்ஸ்டீனின் அறிவைக் கண்டு வியந்த உலகம், அவர் மறைந்த பிறகு அவருடையை மூளையை வைத்து ஆராய்ச்சி செய்தது! அந்த அளவுக்கு ஐன்ஸ்டீனின் அறிவு அறிவியலும் மக்கத்தான பங்களிப்பை அளித்திருக்கிறது. ஆனால், ஐன்ஸ்டீன் பள்ளியில் படிக்கும் வரை சாதாரண மாணவராகத்தான் இருந்தார். ஐன்ஸ்டீனிடம் வித்தியாசமான ஒரு பழக்கம் இருந்தது. வார்த்தைகளாகப் படித்து மனப்பாடம் செய்ய மாட்டார். காட்சிகளாக, படங்களாக மனதிற்குள் ஓட்டிப் பார்ப்பார். நேரம் கிடைக்கும்போது அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பார். ஐன்ஸ்டீனின் அப்பா பொறியாளர் என்பதால், மகனையும் […]
‘ஹீமோபிலியா தினம்’ அறிவது அவசியம்!
இந்தியாவில் சுமார் 1,36,000 பேர் ஹீமோபிலியா ஏ பாதிப்பினால் அவதிப்படுவதாகச் சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. இது அதிர்ச்சியானது தான்.
வாழ்வின் மிக உயரிய பண்பு எளிமைதான்!
இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி, கட்டிடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் மற்றும் சிற்பி போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார். குறிப்பாக, மோனாலிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் போன்ற உலக புகழ்பெற்ற ஓவியங்களைப் படைத்தவர். கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் கொண்டவர். மிகச்சிறந்த கற்பனை வளம் உடையவரான டாவின்சி உடற்கூற்றியல் மற்றும் வானியல் துறைகளிலும் பங்களித்துள்ளார். தனது பன்முக ஆற்றலால் பிரபஞ்ச மனிதர் என்று […]
தமிழன் என்றால் யார்?
பெரியாருக்கும், குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே இறை நம்பிக்கை சார்ந்த கருத்து முரண் இருந்தாலும், அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்தது அனைவரும் பாராட்டும் விதத்தில் இருந்தது. இருவருக்குமிடையே இறை நம்பிக்கை தொடர்பாக நாகரீகமான விவாதம் நடைபெற்றுள்ளது. அவற்றில் சிலவற்றைக் காண்போம். (குன்றக்குடி அடிகளார் பெரியாருக்கு எழுதிய கடிதம்….) குன்றக்குடி டிசம்பர் 26, 1956 அன்புள்ள பெரியார் அவர்களுக்கு, திருவருள் இன்பம் யாண்டும் மலர்க! தாங்கள் 15.12.1956 இல் மதுரையில் நடந்த திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் அறிவித்திருக்கும் போராட்டச் […]
அமானுஷ்ய விஷயங்களில் ஷேக்ஸ்பியருக்கு இருந்த நம்பிக்கை!
அக்கல்ட் (Occult) என்ற அறிவுக்கு அப்பாற்பட்ட அமானுட விடயங்களில் ஷேக்ஸ்பியருக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.