குறுக்கெழுத்துப் போட்டி

பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்!

தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன.

அபூர்வமான பாடல்களைப் பாடிய ஜமுனா ராணி!

சில பாடல்களே வெளிவந்திருந்தாலும் இப்போது சட்டென்று அதைப் பாடியவரின் பெயரும் முகமும் எதாவது ஒரு விதத்தில் தெரியவந்துவிடுகிறது. ஆனால், 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு சில அருமையான பாடல்களைப் பாடியவர்களின் குரல் நினைவிலிருக்கிறது. அந்தப் பாடல் வரிகள் நினைவிலிருக்கின்றன. அதேசமயம் அதைப் பாடியவரின் முகமும் பெயரும் நமக்குப் பரவலாகத் தெரிவதில்லை.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் மிகவும் பிரபலமான பாடலான ‘யாரடி நீ மோகினி’ என்ற பாடலை டி.எம்.எஸ்-ஸோடு இணைந்து […]

அழகும் ஆரோக்கியமும் எந்த உணவில் அதிகம்?

இயற்கையின் படைப்பில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதற்கே உண்டான தனித்துவமான அழகை பெற்றுள்ளது. மலர்கள், நதிகள், மலைகள் ஆகியவற்றை போல மனிதனின் அழகு என்பது ஒவ்வொரு பருவ வயதிலும் உடல் மற்றும் மன மாற்றங்களுக்கு ஏற்ப இயற்கையாக மாறுபடுகிறது. அழகு என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற எண்ணம் மாறி, தற்போது ஆண் பெண் என இரு பாலாருக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. அழகாக தோற்றமளிப்பது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ஆளுமைத் திறனை பன்மடங்கு கூட்டுகிறது. […]

உலகளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம்!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, உலகிலேயே அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் ஆசியாவில் இந்த தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேங்காயின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தேங்காயின் பன்முகத்தன்மையை கொண்டாடும் விதமாகவும் உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒருங்கிணைந்த அரசு அமைப்பான ஆசிய பசிபிக் தேங்காய் சமூகம் உருவாக்கப்பட்ட தினத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் […]

‘அணையா விளக்கு’ தந்த ஆர்.வி எனும் அறிஞர்!

இருபதாம் நூற்றாண்டு கண்ட சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் – படைப்பிலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்கவர் ஆர்.வி., என்று அழைக்கப்படும் ஆர்.வெங்கட்ராமன். தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், 1918-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் நாள், இராமையர்-சீதாலட்சுமி இணையருக்குப் பிறந்தவர். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்குகொண்டு துண்டுப் பிரசுரங்கள் எழுதித் தருவது, பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்புவது போன்ற பணிகளில் ஈடுபட்டார். பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும் விடுதலைப் போராட்டத்துக்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 1956-ம் ஆண்டு வெளிவந்த இவருடைய […]

காட்டின் தாய் என அழைக்கப்படும் அதிசய மரம்!

மடகாஸ்கரில் ஒரு மரத்தை ‘காட்டின் தாய்’ என்று அழைக்கிறார்கள். பார்ப்பதற்கு வானத்தை நோக்கி வேர் விட்டிருப்பது போலவும், மிகப்பெரிய தண்டு கொண்டதாகவும் இருக்கும் இந்த மரம், உண்மையில் அந்தத் தீவின் இயற்கை வரலாற்றில் முக்கியமான ஓர் உயிரினம். இதுதான் கிராண்டிடியரின் பாவோபாப் (grandidiers baobab). பாவோபாப் மரங்கள் பொதுவாக ‘தலைகீழ் மரங்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் அறிவியல் பெயர் அடான்சோனியா கிராண்டிடியரி. மடகாஸ்கரில் மட்டும் காணப்படும் ஆறு பாவோபாப் இனங்களில் இதுவும் ஒன்று. அங்கு இதை ரெனாலா […]