இலக்கியம்

அன்பினால் ஆட்கொண்ட அழகர்!

நவம்பர் 14-ம் தேதி நாகை மாவட்டம் வடக்குப் பொய்கை நல்லூரில் நடைபெற்ற கோரக்கச் சித்தர் விழாவில் எனது உரையை நிறைவு செய்தபோது இரவு மணி 10:30 ஆகி இருந்தது. வழக்கம் போலவே வியர்வையில் குளித்திருந்தேன். எனவே தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பிக் குளித்துவிட்டு அதன் பிறகு உணவருந்தப் போகலாம் என்று தீர்மானித்தோம். என்னோடு தம்பிகள் சந்துரு, பாபுராஜ், மணிகண்டன் என்று நாங்கள் மொத்தம் நான்கு பேர். ஆனால், அறைக்குச் சென்று விட்டு, அதற்குப் பிறகு உணவருந்தப் போனால் அனைத்து […]

இழந்த மழையின் அற்புதம்!

வாசிப்பின் ருசி: * “மூன்று நாட்களாக மழை விடாது பெய்து கொண்டிருக்கிறது. ஊர்வாசிகளுக்கு மழை தரும் ஒரே செய்தி ‘அசௌகரியம்’ என்பது தான். விரோத பாவம் கொள்கிறார்கள். மூக்குப்பொடி வாங்கக் குந்தகமாக இருக்கிறது என்று தூற்றுகிறார்கள். மழையின் அற்புதத்தை முற்றாக இழந்து விட்டோம். எனக்கும் மழைக்குமுள்ள உறவு கூடச் சீரானது அல்ல தான். என்னை மறந்து அதைப் பார்க்க எனக்குத் தெரியவில்லை. மழையில், மழையை ரசிக்காதவர்களின் கோபத்தைப் பார்ப்பது, மழையைப் பார்ப்பது அல்ல. மழையைப் பார்க்க எனக்குத் […]

பொறுமையாகத் தான் எழுத வேண்டும்: அசோகமித்திரன்!

பொறுமையாகத்தான் எழுத வேண்டும். அப்போது தான் அந்தக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைச் சரியாகக் கூற முடியும், அதாவது படைப்புக்கு நியாயம் செய்யும் படி உடனே எழுதினால் செய்தி பத்திரிகை மாதிரி ஆகிவிடும். எந்த இடத்தில் உங்களுக்கு வேர்கள் இருக்கிறதோ அந்த இடத்தில் இருப்பது நல்லது. பேட்டியொன்றில் அசோக மித்திரன்.

படைப்பாளிக்குத் தந்திரங்கள் தெரியாது!

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’’ பிரபஞ்சன் அடிக்கடி ராகத்துடன் முணுமுணுக்கும் இந்தப் பாடலுக்கும் அவருடைய வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. “காலம் என்னை எப்படியெல்லாம் வழிநடத்தியதோ அப்படியே அதன் வழியில் போயிருக்கிறேன்’’ – என்று தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் பிரபஞ்சன். அவருடைய இயற்பெயரான வைத்தியலிங்கம் என்று கூப்பிடுகிறவர்கள் கொஞ்சப் பேர்கள் தான். தன்னுடைய அப்பா நடத்தி வந்த கள்ளுக்கடையைப் பற்றியும், அதற்கு வந்த கூட்டத்தைப் பற்றியும், ஒரே நாளில் கள்ளுக்கடையை அப்பா கைவிட்டுவிட்டதைப் பற்றியும் […]

என் உறவை நான் மறவேன்!

அருமை நிழல்: கோட் சூட்டுடன் காட்சியளிக்கும் மக்கள் திலகத்துடன் திருமதி ஜானகி எம்.ஜி.ஆர், நடிகர் அசோகன்.

கரக்பூர் ரயில் நிலையத்தில் சீறிய வ.உ.சி!

“நாங்கள் கிலாபத் ஸ்பெஷல் ரயிலில் கல்கத்தா பயணம் செய்து கொண்டிருந்தபோது, கல்கத்தாவுக்கு முன்னால் கரக்பூர் என்ற ஒரு பெரிய ரயில் நிலையம். அங்கே நாங்கள் சென்ற வண்டி நின்றது. சுமார் மூன்று மணி நேரமாகியும் வண்டி புறப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று பயணிகள் கேட்டார்கள். கல்கத்தா மெயில் வண்டி பின்னால் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த மெயில் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து எங்கள் ஸ்பெஷலுக்கு முன்பு புறப்படும் என்றும், அது புறப்பட்டு போன பின்பு அரை […]