ஆரோக்கியத் தகவல்கள்

ஆரோக்கியமான உணவு முறையால் அடுத்த தலைமுறை உருவாக்குவோம்!

ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையானது ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள். மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பது உணவு, உடை உறைவிடம். இதில் முதலிடம் வகிப்பது ஆரோக்கியமான உணவு முறையாகும். உணவு இன்றி உடல் இயங்காது. உடலை இயக்குவதற்கான சக்தி என்பது நமக்கு சுத்தமான உணவின் மூலமே கிடைக்கிறது. வாழ்வியல் முறையில் நாம் கொண்டுள்ள பழக்க வழக்கங்களே நமது ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் ஏராளமான பாடல்கள், நமது தொன்மைக்குச் சான்றாக விளங்கும் சங்க இலக்கியத்தில் உள்ளன. தமிழர்களின் […]

உடல் நிலையை சீராக வைக்கும் குளிர்கால சூப் வகைகள்!

மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்க உள்ள இந்த காலத்தில் உடல் நலத்தில் அக்கறை அவசியம் தேவை. குளிரின் தாக்கத்தால் சருமம் வறட்சி, அரிப்பு, சருமம் கருமை அடைவது மற்றும் சில உடல் நல பிரச்சனைகள் வரலாம். இந்த நேரத்தில் உடல் வெப்பம் சீராக இருக்காது. இதன் காரணமாக உடல் நலனில் பாதிப்பு உண்டாக்கும். கால நிலைக்கு ஏற்றது போல் உணவு முறைகளிலும் அக்கறையுடன் இருப்பது நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். பொதுவாக குளிர் காலத்தில் […]

குக்கரில் சமைக்கக் கூடாது 6 உணவுகள்!

மண்பாண்டங்கள் தொடங்கி எவர்சில்வர், பித்தளை, அலுமினியம் என நாம் உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் காலச்சூழலுக்கு ஏற்ப மாறிவிட்டன. இவற்றில் கால மாற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கமாக பிரஷர் குக்கரில்தான் பெரும்பாலானோரின் வீடுகளிலும் உணவு சமைக்கப்படுகிறது. உலை கொதித்து, அரிசியைப் போட்டு சோறு வெந்து வடிப்பதற்குள்அரை மணி – முக்கால் மணி நேரம் ஆகிவிடுகிறது. ஆனால், அரிசியைப்போட்டு, தண்ணீரை ஊற்றி, இரண்டு விசில்வைத்து எடுத்தால், பத்தே நிமிடங்களில் சாதம் தயாரிகிவிடும் என்பதால், பல […]

காக்க காக்க… தூய்மை காக்க…!

அனைத்து மக்களின் மனதிலும் தூய்மை எண்ணம் தோன்ற வேண்டும், அவ்வாறு தோன்றினால் தான் தூய்மையான பாரத தேசத்தை நாம் உருவாக்க முடியும்.

முதுமை குறித்த தெளிவான பார்வை தேவை!

முதுமையில் தள்ளாடுதல், பார்வை மங்கல், படபடப்பு, செரிமானம், குடல் இயக்க கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

வயதானவர்கள் தடுமாறி விழுவதை எப்படித் தடுக்கலாம்?

முதியோர்கள் வீட்டில் கீழே விழுவதும் தலையிலோ எலும்பு முறிவு ஏற்படும் வகையிலோ காயம் ஏற்படுவது என்பது முதியோர்களை வீடுகளில் பேணுபவர்களுக்கு எப்போதுமே கலக்கத்தை ஏற்படுத்தும் விசயமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு கீழே விழுவது மற்றும் அது தொடர்பான மரணங்கள் மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒருமுறை கீழே விழுந்து எலும்பு முறிவு, இடுப்பெலும்பு முறிவு, தலையில் மூளையில் பலத்த காயம் என்று ஏற்பட்ட பின் முதியோர்களால் பிறரது உதவியின்றி வாழ […]