தாராபாரதி: ஊக்கம் தரும் கவிதைகளைத் தந்த கவிஞர்!

“வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம்” என்ற நம்பிக்கை ஊட்டும் வரிகளை எழுதிய தாராபாரதியின் இயற்பெயர் ராதாகிருஷ்ணன்.

ராதா என்ற தன் பெயரை தாரா என்றும், பாரதியார் மேல் கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரோடு பாரதியை இணைத்துக்கொண்டு தாராபாரதி என்று பெயர் வைத்துக்கொண்டார்.

34 ஆண்டுகள் ஆசிரியராக சிறந்த சேவை செய்ததற்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார். கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

பாரதம் அன்றைய நாற்றங்கால், புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை), விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம் உள்ளிட்ட கவிதைகள், நூல்கள் ஊக்கமளிப்பதாகவும், முற்போக்கு சிந்தனை நிறைந்ததாகவும் இருக்கின்றன.

இவரது நூல்களை தமிழக அரசு 2010-ம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கியது.

அவருடைய கவிதைகளில் சில…
 
“வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் – உன்
கைகளில் பூமி சுழன்றுவரும்”
 
“உயிரே! மெய்யே!
உயிர்மெய்யாய் இருப்பவளே!
தமிழே, உனக்கு
உயிர் – மெய்யாய் இருக்கிறதா?”
 
“குழந்தையின் நாக்கிலில்லை
கோயில்மணி நாக்கிலில்லை
அழகுதமிழ் தீர்ப்பிலில்லை
அலுவலகக் கோப்பிலில்லை” என்று வேதனைப்படுகிறது.
 
“தமிழறியும் பெருமாளும்
தமிழ்க் கடவுள் முருகனும்
அமுதத் தமிழ் கேட்டால்
ஆசி தர மறுப்பாரா?”
 
“கன்னிக்குமரியின்
கூந்தலுக்காகக்
காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்
கம்பனின் அமுதக்
கவிதைகளுக்கு
கங்கை அலைகள் இசையமைக்க…
காளிதாசனின்
தேனிசைப் பாடல்கள்
காவிரிக் கரையில் எதிரொலிக்க…”
 

– மணி அமுதன்

Comments (0)
Add Comment