72 குண்டுகள் முழங்க மூத்த தோழருக்கு முழு அரசு மரியாதை!

இந்​தியக் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்தத் தலை​வர் ஆர். நல்​ல​கண்​ணு (101) அவர்கள் சிறுநீரகக் கோளாறு, ரத்த அழுத்​தம் மற்​றும் உணவு விழுங்க முடி​யாத நிலை ஏற்பட்டதால், கடந்த 1-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

தீவிர சிகிச்சைப் பிரி​வில் இருந்த அவருக்கு பல்​வேறு மருத்​து​வத் துறை நிபுணர்​கள் கண்​காணிப்​பில் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது.

கடந்த 23-ம் தேதி அவரது உடல்​நிலை​யில் மிகப்​பெரிய பின்னடைவு ஏற்​பட்​டது. உடல்​நிலை மிகவும் மோசமடைந்​ததை தொடர்ந்து நேற்று பகல் 1.55 மணிக்கு நல்​ல​கண்ணு கால​மா​னார்.

இதையடுத்து அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு, மாலை 5 மணிக்கு சென்னை தி.நகர் செவாலியர் சிவாஜி கணேசன் சாலை​யில் உள்ள இந்​திய கம்யூனிஸ்ட் கட்சி அலு​வல​க​மான பாலன் இல்​லத்​தில் அஞ்சலிக்காக வைக்​கப்​பட்​டது.

அதைத் தொடர்ந்து பொது​மக்​கள், கட்​சி​யினர், பல்​வேறு அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்​தவர்​கள், குடும்​பத்​தினர், உறவினர்​கள், நண்​பர்​கள் என ஏராள​மானோர் நல்​ல​கண்ணு உடலுக்கு அஞ்​சலி செலுத்தினர்.

இன்று பிற்​பகல் 3 மணிக்கு பிறகு, அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க வீர முழக்கங்களுடன் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்பின்னர் நல்​ல​கண்​ணு​வின் விருப்பப்படியே அவரது உடல் ஊர்​வல​மாக கொண்டு செல்லப்பட்டு மருத்​துவ மாணவர்​களின் ஆராய்ச்​சிக்​காக, சென்னை சென்ட்​ரலில் உள்ள சென்னை மருத்​து​வக் கல்​லூரிக்கு (எம்​எம்​சி) – ராஜீவ்காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு தானம் வழங்​கப்​பட்டது.

நல்லகண்ணுவின் மறைவையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் அடுத்த 7 நாட்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் 3 நாட்களுக்கும் துக்கம் அனுசரிக்கும் விதமாக கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்​பர் 26-ம் தேதி நல்​ல​கண்ணு தனது 101-வது பிறந்தநாளைக் கொண்​டாடி​னார் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

Comments (0)
Add Comment