இன்றைய நச்:
* கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்ப்பார்க்கக் கூடாது.
* தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.
* தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.
* மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்.
* நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு.
* எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மன திடம் வேண்டும்.
– காந்தியடிகள்