எது பாஜகவுக்கு திருப்புமுனை?

செய்தி:

மதுரையில் மார்ச் ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம்; பிரதமர் மோடியின் வருகை அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

– மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு.

கோவிந்த் கமெண்ட்:

வழக்கமாக திருச்சியில் எதாவது அரசியல் கட்சிகளின் கூட்டமோ, மாநாடோ நடந்தால் பெரும் திருப்புமுனை என்று சொல்வது வழக்கம்.

இப்போது மதுரைக்கு மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தை முன்வைத்து திருப்புமுனையாக இருக்கும் என்றிருக்கிறார் எல்.முருகன்.

இனிமேல் என்ன திருப்புமுனை நடக்கப்போகிறது?

ஒருவேளை விஜய் மதுரைக்கு வந்து திருப்புமுனையை ஏற்படுத்தி பலரையும் திரும்பிப் பார்க்க வைக்கப் போகிறாரா என்ன?

பிரேமலதாவும் திமுக கூட்டணிக்குப் போய்விட்ட நிலையில், பாஜக வேறென்ன திருப்புமுனையைத் தான் எதிர்பார்க்க முடியும்?

Comments (0)
Add Comment