நூல் அறிமுகம்: நாவல்
“தனிமையைப் போல் மனிதனைச் சோதிப்பது எதுவுமில்லை” – கிரிக் பாதிரியார்.
இந்த வருடத்தில் வாசித்த நல்ல வாசிப்பனுபவம் தந்த நாவல் மமாங்தய்யின் கருங்குன்றம். கடந்த வருடத்தின் இறுதியில் வாசிக்க துவங்கியிருந்தாலும் தற்சமயம்தான் வாசிப்பை நிறைவு செய்ய முடிந்தது.
லாமாக்களின் பூமியான திபெத்தில் சுவிசேஷப் பணியை மேற்கொள்ளும் இலட்சியத்துடன் நமது நாட்டின் வடகிழக்கிலுள்ள பூர்வகுடிகளின் நிலத்தினூடக பயணிக்கிறார்கள் பிரெஞ்சு பாதிரியார்கள்.
அந்த பாதிரியார்களை தமது எல்லைக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் பூர்வகுடிகள். 1850 -களில் நடந்த இந்த போராட்டத்தை மிகநுட்பமாக விவரிக்கிறது இந்த கருங்குன்றம்.
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் மலைப்பகுதிகளின் நிலக்காட்சி விவரணைகள் அபாரமாக தனித்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன.
நம்மை அந்த நிலத்துக்குள், அந்த காலகட்டத்துக்குள் கண்முன்னே நிகழ்வதான தொனியை தனது மொழிநடையில் எழுதிய மமாங் தய்-யைப் பாராட்டலாம்.
அதேபோல் நல்ல வாசிப்பனுபவம் தரக் காரணம் இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்த கண்ணையன் தட்சிணாமூர்த்தியின் மொழிபெயர்ப்பு.
கிமூர், கஜின்ஷா, கிரிக் பாதிரியார், லெண்டம், அவேசா போன்ற கதாபாத்திரங்கள் மனதைவிட்டு காலம் கடந்தாலும் நீங்காதவை.
***
கருங்குன்றம் (நாவல்)
மூலம்: மமாங்தய்
தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி
வெளியீடு: சாகித்ய அகாதெமி
நன்றி: முகநூல் பதிவு