செய்தி:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணம் கிடுகிடு உயர்வு.
“கட்டண உயர்வு குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.”
– தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
வழக்கம்போல பேருந்துக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என அரசு வழக்கமான இந்தப் பல்லவியைத்தான் எச்சரிக்கிற மாதிரி எச்சரிக்கும்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு 3 மடங்கு வரை ஏற்றுவது விழாக்காலங்களில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.
ஆனால், எப்படி வரி உயர்வு பொதுமக்களின் தலையில் விழுகிறதோ, அதேமாதிரி இந்தக் கட்டண உயர்வுக்கு இரையாவதும், அதில் பயணிக்கும் சாதாரண பயணிகள் தான்.