தங்கம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எளிய வழி?

நம் நாட்டு மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ள ஒரு உலோகமே தங்கமாகும்.

பிறப்பு முதல் இறப்பு வரை, அனைத்து நிலைகளிலும் இதன் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தங்கத்தின் வரலாறு, மனித குல நாகரீகத்தின் ஆரம்ப காலத்திலேயே தொடங்குகிறது.

இது பண்டைய எகிப்தில் தோன்றியதாக கூறப்படுகிறது.

பூமியின் ஆழத்தில் உள்ள வெப்பம், அழுத்தம் கொண்ட செயல்பாடுகள் மூலம் உருவாகிறது.

பூமியில், களிமண்கள் நிறைந்த சூடான திரவங்கள், பாறைகளில் ஊடுருவி, தங்கப் படிமங்களாக மாறுகின்றன.

பல்லாண்டுகள் தொடர்ந்து நடைபெறும் இச்செயலால் சுரங்கங்கள் உருவாகின்றன.

இவற்றிலிருந்து தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது.

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திரங்கள் வெடித்தபோது உருவானது எனவும் நம்பப்படுகிறது.

முற்காலத்தில், ஆற்றுப் படுகைகளில் இருந்து தங்கத்தைப் பிரித்து எடுத்து சேமித்தனர்.

கிரேக்கர்கள் பெருமளவில் இப்பணிகளில் ஈடுபட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மஞ்சள் நிறமுள்ள உலோகமான தங்கம், Au என்று குறியீட்டினால் குறிக்கப்படுகிறது.

இது நீரைப் போல ஏறத்தாழ 19 மடங்கு எடை உள்ளது. இது அழகான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

வெப்பத்தை நன்கு கடத்த வல்லது. உறுதியானது மற்றும் பளபளப்பானதும் கூட.

துருப்பிடிக்காத காரணத்தால், பல துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சிறந்த மின்சார கடத்தி என்பதால் மொபைல் போன்கள், கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு பயன்பாடுகளுக்கும் உதவுகிறது.

உலக நாடுகளின் வர்த்தகத்தில் தங்க இருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. பங்குச் சந்தைகளில் முதலீடாகவும் உள்ளது.

பல் மருத்துவத்திலும் உதவுகிறது.

தங்கத்துடன் தாமிரம், வெள்ளி, நிக்கல் போன்ற உலோகங்களை கலந்து, அதன் கடினத்தன்மை மற்றும் வண்ணத்தை மாற்றி அமைக்கின்றனர்.

இந்தியாவில் எந்த ஒரு மங்கல நிகழ்வும் தங்கம் இன்றி நிறைவு பெறாது.

நம் நாட்டுப் பெண்கள், தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் முக்கிய ஆபரணமாக தங்கத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கிமு 600-ம் நூற்றாண்டில் ஆசிய கண்டத்தில் தான், முதல் தங்க நாணயங்கள் உருவாக்கப்பட்டதாக வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.

தங்கமானது அதன் தூய்மை மற்றும் நிறத்தால் வகைப்படுத்தப்படுகிறது.

காரட் என்ற அளவுகோலில் தூய்மையை குறிப்பிடுவர்.

அதனடிப்படையில் 24 காரட், 22 காரட் 18 காரட் 14 காரட் மற்றும் 10 காரட் ஆகியவை உள்ளன தூய தங்கம் என்பது 24 கேரட்டை குறிக்கும்.

இது 100 சதவீத சுத்தமான தங்கமாகும். இது மென்மையானதுமாகும். 22 காரட் என்பது 91.6% தங்கமும், எஞ்சியவை பிற உலோகங்களான செம்பு, வெள்ளி போன்றவை கலந்ததும் ஆகும்.

இதுவே நகைகள் செய்ய ஏற்புடைய சிறந்த தங்கமாகும்.

இந்த வகையானது நீண்ட கால பயன்பாட்டிற்கும் மற்றும் உறுதித் தன்மை மிக்கதாகவும் விளங்குகிறது.

KDM தங்கம் என்பது கேட்மியம் எனும் உலோகத்தை உபயோகப்படுத்தி, தங்கத்தை இணைக்க பயன்படுத்தப்பட்ட பழைய முறையாகும்.

தற்போது இது தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் நவீன பாதுகாப்பு உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தங்கத்தின் தரத்தினை உறுதி செய்ய, லண்டனில் 1300-களில் தொடங்கப்பட்டது தான் ஹால்மார்க்.

இந்தியாவில் BIS ஹால்மார்க் என்பது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் தரத்தை உறுதி செய்ய, இந்தியத் தர நிர்ணய அமைப்பால் வழங்கப்படும் அதிகாரபூர்வ முத்திரையாகும்.

நகைகளில் கலப்படம் செய்வதைத் தடுத்து, தரத்தை உறுதிப்படுத்தி, நுகர்வோருக்கு நம்பிக்கை அளிப்பதே இதன் நோக்கம். நாடு முழுவதும் இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

தங்கத்தில் மஞ்சள் மட்டுமல்லாது, வெள்ளைத் தங்கம், ரோஜா தங்கம், பச்சைத் தங்கம் ஆகிய வகைகள் உள்ளன.

வெள்ளி, நிக்கல், பல்லேடியம், தாமிரம் போன்ற பல்வேறு உலோகக் கலவைகளைப் பயன்படுத்தி, தோற்றத்தை மாற்றுவதன் மூலம் உருவாக்கப்படுபவையே.

இவ்வகை தங்கங்கள் வெள்ளைத் தங்கம், ரோஜா தங்கத்தைவிட விலை அதிகமாக உள்ளது.

பச்சை தங்கமானது, நீடிக்கும் திறன் மற்றும் கண்கவர் அழகின் காரணமாக, நுகர்வோர் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

கனகம், தரகம், ஆடகம், பவுன் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் தங்கத்தின் விலை, நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை, கிட்டதட்ட ஒரு பவுன் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள், தங்கத்தை அதிக அளவில் வாங்கி, தங்கள் வெளிநாட்டு இருப்புகளில் வைத்திருக்கின்றன.

பண வீக்கம், நாணயத்தின் ஏற்ற இறக்கங்கள், மற்றும் நிதி நிச்சய ற்ற தன்மைக்கு எதிராக இது ஒரு அரணாக செயல்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் உலக சந்தையில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது சர்வதேச மத்திய வங்கிகளால் பெரும் அளவில் தங்கத்தை வாங்க வழி வகுத்தது.

IMF தகவலின்படி, மத்திய வங்கிகள் சமீபத்தில் தங்கள் இருப்பில் 37 மெட்ரிக் தன் தங்கத்தை சேர்த்துள்ளன.

தங்க உற்பத்தியில் சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.

இந்தோனேசியா, பூட்டான், ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்தியாவை விடக் குறைந்த விலையில் தங்கம் கிடைக்கிறது.

குறிப்பாக பூட்டானில், வரி இல்லாமல் கிடைக்கிறது. இந்தியா, தங்க உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கவில்லை என்றாலும், அதனை இறக்குமதி செய்யும் நாடுகளில் முன்னணியில் உள்ளது.

பல்வேறு திட்டங்கள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்ய அரசு ஊக்குவித்து வருகிறது.

உலக நாடுகளின் வர்த்தகத்தில் தங்க இருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. பங்குச் சந்தைகளில் முதலீடாகவும் உள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வல்லதுமாக திகழ்கிறது.

தங்கமானது, அதன் அழகியல் மற்றும் நடைமுறைப் பண்புகளால், மனித வரலாற்றில் ஆரம்பம் முதல் இன்று வரை மதிப்பு மிக்க ஒன்றாகவே உள்ளது.

– எஸ். வாணி

Comments (0)
Add Comment