புத்தனும்.. ஆசைப்பட்டியலும்…!

வாசிப்பின் ருசி:

முன்பக்கம்
புத்தனின் ஓவியம் இருப்பதைப்
பார்க்கவில்லை,
பின்பக்கம் இருந்த ஆசைகளின் பட்டியலை
அவசரமாகக் கிழித்துவிட்டேன்;

பதற்றம் நிரம்பிய குற்ற உணர்வுடன்
புத்தனின் கிழிந்த முகத்தை
நிதானமாக ஒட்டினேன்;

பின்னால் மீண்டும் தன்னைப்
பிசிறே இல்லாமல்
தயாரித்துக் கொண்டுவிட்டது
ஆசைகளின் பட்டியல்!

– சந்தியா பதிப்பகம் வெளியீட்டில் எழுத்தாளர் கல்யாண்ஜி எழுதிய ‘வெயிலில் பறக்கும் வெயில்’ நூலிலிருந்து.

 
 
 

 

Comments (0)
Add Comment