சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தகத் துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது. கடந்த 6ம் தேதி ஒரு சவரன் ரூ.75,000 மீண்டும் தாண்டிய நிலையில், பின்னர் விலை குறைந்தது.
அதன்பிறகு கடந்த 21ம் தேதியில் இருந்து விறுவிறுவென விலை அதிகரித்து, தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கிப் பயணிக்கிறது.
அதாவது, கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 390 ரூபாயும், சவரனுக்கு 3,120 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ. 85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,640க்கு விற்பனையாகிறது.
இந்த தொடர் விலை ஏற்றம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படித் தொடர்ந்து விலை ஏறீனால், ஒரு சவரன் ரூ.78,000ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படும்.
தங்கம் விலையைத் தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.136க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 6 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை நிலவரம்:
27.08.2025 ம் தேதி ஒரு சவரன் ரூ.75,120/-
28.08.2025 ம் தேதி ரூ.75,240/-
29.08.2025 ம் தேதி ரூ.76,280/-
30.08.2025 ம் தேதி ரூ.76,960/-
31.08.2025 ம் தேதி ரூ.76,960/-
01.09.2025 ம் தேதி ரூ.77,640/-