செயல்பாடுகளுக்கான சிறப்பான அங்கீகாரம்!

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜெண்ட்ஸ் அமைப்பின் உறுப்பினரான வழக்கறிஞர், முனைவர் குமார் ராஜேந்திரன், சர்வதேச ரோட்டரி அமைப்பிற்கும், ரோட்டரி அறக்கட்டளைக்கும் பல்வேறு பணிகளைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அவரை அங்கீகரிக்கும் விதமாகவும் அவரது பணிகளைப் பாராட்டும் விதமாகவும் சர்வதேச ரோட்டரி சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிகழ்ச்சியின்போது, சர்வதேச ரோட்டரி அமைப்பின் இயக்குநர், ரோட்டேரியன் வினோத் சரோகி, ரோட்டேரியன் அன் அன்னா பிரான்செஸ்கோ, 2025–26ம் ஆண்டுக்கான சர்வதேச ரோட்டரி அமைப்பின் தலைவர் ரோட்டேரியன் பிரான்செஸ்கோ அரெஸ்ஸோ, 2025–27ம் ஆண்டுக்கான சர்வதேச ரோட்டரி அமைப்பின் தலைவர், ரோட்டேரியன் ஏ.கே.எஸ். இ.ஆர். முருகானந்தம் ஆகியோர் இணைந்து ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜெண்ட்ஸ் அமைப்பின் உறுப்பினரான டாக்டர் குமார் ராஜேந்திரனுக்கு பரிசளித்து கவுரவித்தனர்.

Comments (0)
Add Comment