வாசிப்பின் ருசி:
சிறுவர்கள் புத்தகம் படிப்பதும், பெரியவர்கள் புத்தகம் படிப்பதும் ஒன்றில்லை.சிறுவர்கள் புத்தகங்களுக்குள் எதையோ தேடுகிறார்கள். கண்டறிகிறார்கள். எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளே அவர்களை வழி நடத்துகின்றன.
பெரியவர்களுக்குக் கடந்தகாலம் பற்றிய ஏக்கமே வாசிக்க வைக்கிறது. அல்லது நிகழ்கால பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடியோ, ஆறுதல் தேடியோ புத்தகங்களை நாடுகிறார்கள்.
– எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்