அருமை நிழல்:
1970-களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் லதா. 1973ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தான் லதா அறிமுகமானார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் பல படங்களில் இவர் நாயகியாக நடித்திருந்தார்.
அதில் நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும், நாளை நமதே, உழைக்கும் கரங்கள், நினைத்ததை முடிப்பவன், மீனவ நண்பன், நீதிக்கு தலைவணங்கு, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
குறிப்பு: மாஸ்கோ திரைப்பட விழாவில் எம்.ஜி.ஆருடன் நடிகை லதா எடுத்துக்கொண்ட புகைப்படம்.