ரசிகா்களுக்காகவே அரசியலுக்கு வந்தேன்!

கமல்ஹாசன் விளக்கம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், “சினிமாத்துறையில் என்னைத் தூக்கிவிட்ட ரசிகா்களுக்கு நான் எப்படி நன்றி கூறுவேன்? அதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

ஒரு முதலமைச்சர் அல்லது சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினராக பதவி வகிக்க நான் அரசியலுக்கு வரவில்லை. ஒரு சட்டப்பேரவை உறுப்பினா் அவரது தொகுதிக்கு என்ன செய்வாரோ அதை நான் மெல்ல மெல்ல செய்து வருகிறேன்” என்றாா்.

Comments (0)
Add Comment