பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பேசும் நூல்!

நூல் அறிமுகம்:

குடும்ப வறுமைக்காக தந்தையை இழந்த ஒப்பந்தப் பணியாளராக திருப்பூர் மில்லில் பணியாற்றும் ஆனந்தியின் கதை, கணவனை இழந்த பின் மறுமணம் செய்து கொள்வது பற்றிய கதை,

குடிகாரக் கணவனால் கஷ்டப்படும் வனஜா தன் மகளை அரசாங்க அதிகாரியாக்கப் போராடுவது பற்றிய கதை, குடிகாரக் கணவனை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து அவனைத் திருத்தப் போராடும் சத்யாவின் கதை,

தீபாவளி பண்டு சீட்டு பிடிக்கும் நடராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள பண்டு சீட்டு போட்டதுடன் பலரையும் பண்டு சீட்டில் சேர்த்து விட்டு விஜயாவும் ஜமுனாவும் அடையும் பரிதவிப்பு பற்றிய கதை,

பட்டாசு ஆலை விபத்தில் இறந்துவிடும் தேன்மொழியின் கதை, அதிகார வர்க்கத்திடம் நியாயம் கேட்டு செல்லும் பெண்ணின் அவல நிலை பற்றிய கதை என இத்தொகுப்பில் மொத்தம் 12 சிறுகதைகள் உள்ளன.

பெண்கள் சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சினைகளையும், அவற்றை எதிர்கொள்ளப்படும் வேதனைகளையும் பற்றி பேசுகிறது இதில் இடம்பெற்றுள்ள கதைகள்.

முனியப்பசாமியும் ரெட்டக்கிடாவும் கதை வறிய மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு பணம் பறிக்கும் சாமியார்களிடம் ஏமாறும் ஏழைப்பெண் பற்றிய நிதர்சனம்.

உரைக்கிணறு கதை ஓய்வுபெற்ற ஒருவர் மனநிலையைப் பற்றி யோசிக்க வைக்கிறது. பதின்மம் கதை மிக அருமை. இரு மகன்களுக்கு தாயாக உள்ள சித்ரா பதின்ம வயதில் உள்ள மகனின் மனதில் உள்ள போராட்டங்களை அறிந்து கொள்ளும் கதை அது.

இத்தொகுப்பு முழுவதும் பெண்கள் சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சினைகளையும் பதின்ம வயதில் உள்ள மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என பல்வேறு மக்களைப் பற்றிய உளவியலை புரிந்துகொண்டு அதனை சிறப்பாக சிறுகதையாக ஆசிரியர் படைத்துள்ளார்.

மொத்தத்தில் அருமையான படைப்பு.

******

நூல்: முனியப்ப சாமியும் ரெட்டகிடாவும்
(
சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர்: ஜெயா நவி
பக்கங்கள்: 138.

Comments (0)
Add Comment