சிம்புவை அணு அணுவாகச் செதுக்கிய டி.ராஜேந்தர்!

அருமை நிழல்:

சிம்பு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகின்றார். சிறு வயதில் தன் தந்தை டி.ராஜேந்தர் இயக்கும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் ஈர்த்தார் சிம்பு.

மிகப்பெரிய நடிகராக வளர முக்கியக் காரணம், அவரின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தான். சிறு வயது முதல் சிம்புவிற்கு சினிமாவை கற்றுக்கொடுத்தது டி.ராஜேந்தர் தான்.

டி.ராஜேந்தர் தயாரித்த தாய் தங்கை பாசம், ஒரு வசந்த கீதம், என் தங்கை கல்யாணி மற்றும் எங்க வீட்டு வேலன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் நடிகர் சிம்பு.

சிம்பு முதன்முறையாக ‘காதல் அழிவதில்லை’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படத்தையும் அவரது தந்தையே இயக்கினார்.

‘மன்மதன்’ படத்திற்கு சிம்பு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்தார். ஜோதிகாவுக்கு ஜோடியாக இரட்டை வேடத்திலும் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அதன்பின்னர், 2006-ம் ஆண்டு ’வல்லவன்’ என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

பன்முகத் திறமை கொண்ட மகன் சிம்புவை பட இடைவேளை சமயத்தில், அவரது தந்தை அலங்கரித்தபோது எடுத்த புகைப்படம்.

Comments (0)
Add Comment