கடற்கரையில் அஸ்தமனமான சந்திரன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைந்தபோது ‘வார்த்தை சித்தர்’ வலம்புரி ஜான் எழுதிய வரிகள்…

***

“பொன்மனச் செம்மலே – உனக்கு
உப்பு வியாதியாமே – உன்
உப்பைத் தின்றுதானே
நாங்கள் வளர்ந்தோம்
அதையும் தாண்டி – உன்
உடம்பில் உப்பா?

மண்ணைத் தோண்டி
தங்கம் எடுப்பது வழக்கம் – ஆனால்
இன்றுதான் மண்ணைத்தோண்டி
எங்கள் தங்கத்தைப் புதைத்தோம்

கடற்கரையில் சூரியன்தான்
அஸ்தமனமாகும் – ஆனால்
இன்றுதான் ‘சந்திரன்’
அஸ்தமனமானது…”

  • நன்றி : என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு
Comments (0)
Add Comment