குழந்தையாயிருந்த காலம்தான் வாழ்க்கையின் பொற்காலம்!

கவிஞர் மகுடேசுவரன் பதிவு

வாழ்க்கைப் போக்கில் கற்றுக்கொள்கின்ற பன்னிரு பேருண்மைகளை மொழிபெயர்த்து முகநூலில் பதிவிட்டுள்ளார் கவிஞர் மகுடேசுவரன்.

அ). எவ்வளவு நெருங்கிப் பழகிய நட்பாக இருந்தாலும் காலப்போக்கில் காணாமல் போய்விடுகின்றார்கள்.

ஆ). இம்முழு உலகத்திலும் உங்களை விட்டுப் பிரியாமல் எப்போதும் உங்களோடு இருக்கும் உறவு நீங்கள் மட்டுமே.

இ). யாரும் உங்களுடைய பேருழைப்பைப் பார்க்கமாட்டார்கள், அதன் விளைவை மட்டும்தான் பார்ப்பார்கள்.

ஈ). மனமுடைந்து போவதும் தோல்விகளும் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத பகுதிகள்.

உ). இவ்வுலகத்தில் எங்கே தேடியலைந்தாலும் நீங்கள் வாழும் வீட்டினைப்போல் இதமாவது எதுவுமில்லை.

ஊ). குடும்பமும் காசும் ஆகிய இவ்விரண்டும் மிகமிக இன்றியமையாதவை.

எ). ஒருவர்க்கு மிகச்சிறந்த தோழமையாய்த் திகழ்பவை புத்தகங்கள்தாம்.

ஏ). உடலால் இயங்கிக்கொண்டே இருந்தால்தான் மனத்தின் இறுக்கங்கள் தளரும்.

ஐ). வருந்துவதிலும் அழுவதிலும் வீணடிக்கும் நேரத்தைக்கொண்டு மாற்று விளைவுகளை ஏற்படுத்தமுடியாது.

ஒ). இன்றைய தேவை என்று எதனை நினைக்கிறீர்களோ அது நாளைய தேவையாக இராது.

ஓ). உங்கள் முடிவுகளால்தாம் உங்கள் வாழ்க்கை தீர்மானம் செய்யப்பட்டது. உங்கள் விதியால் இல்லை.

ஔ). குழந்தையாயிருந்த காலம்தான் வாழ்க்கையின் பொற்காலம்.

Comments (0)
Add Comment