ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படையப்பா திரைப்படத்தில் வரும் பாடல்கள் மற்றும் பிஜிஎம் அந்த காலத்திலேயே சக்கை போடு போட்டவை. இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்தப் படத்தில் உருவான ஒரு பாடலின் பின்னணி பற்றி படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய பதிவு இது.
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் பாடகி ஹரிணி ஆகியோர் “சுத்தி சுத்தி வந்தீக” என்ற பாடலை படையப்பா திரைப்படத்திற்காக பாடி இருந்தனர்.
இந்தப் பாடல் பதிவின் போது நடந்த சம்பவத்தைப் பற்றி கே.எஸ்.ரவிக்குமார் பேசியவை, “ஹரிணியை நாங்கள் அந்தப் பாடலில் ஒரு இடத்தில் சிரிக்க சொல்லிக் கேட்டிருந்தோம். ஆனால், அவரோ சிரிக்காமல் வெட்கப்பட்டது போல முடியாது என சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அங்கே நாங்கள் பேசியது அனைத்துமே மைக்கில் பதிவு செய்யப்பட, ஹரிணி வெட்கப்பட்டு சிரிக்கும் இடத்தை மட்டும் சரியாக கட் செய்து அந்தப் பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் சேர்த்துவிட்டார்.
நாங்கள் சொன்னதுபோல ஹரிணி சிரிக்கவில்லை என்றாலும், அவர் வெட்கப்பட்டு சிணுங்கியதை அந்தப் பாடலில் அருமையாக ரஹ்மான் பயன்படுத்தி இருந்தார்.
அந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுபோன்ற விஷயங்களைச் செய்வதில் அவர் மிகப்பெரிய கில்லாடி.” என்றார்.
– நன்றி: முகநூல் பதிவு