சிரிப்பு – காயங்களை ஆற்றும் மருந்து!

இன்றைய நச்:

சிரிப்பு மனித குலத்துக்கு வாய்த்த எத்தனை பெரிய சொத்து. அது மகிழ்ச்சியை வெளிப்படுதுகிறது. மகிழ்ச்சியை எதிராளியிடம் மலர்த்துகிறது. நேசத்துக்கு அஸ்திவாரமிடுகிறது.

சினேகத்துக்கு அது மழை. காதலுக்கு அது வேர். மனசுக்கு அது கண்ணாடி. வார்த்தைகளுக்கு அது மாற்று. வாழ்க்கை ஏற்படுத்தும் காயங்களுக்கு அது மருந்து. ஒரு முத்தத்துக்கு அது நிகரானது.

– பிரபஞ்சன்

Comments (0)
Add Comment