தமிழ் சினிமாவில் பெண் தொழில்நுட்பக்கலைஞர்கள் அரிது. அதிலும் இசையமைப்பாளர்கள் மிக அரிது. அவ்வாறு பணி புரிந்த கலைஞர்களை ஒரு கை விரலில் எண்ணி விடலாம். ‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்றழைக்கப்பட்ட ஜெயலஷ்மி [1937-2017], ராஜலஷ்மி [1940-1992] ஆகிய இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் திரைப்பாடல்களையும், பக்திப்பாடல்களையும் பாடி இருக்கிறார்கள். இவர்கள் இணைந்து ஏழு திரைப்படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்கள்.
இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் (Soolamangalam Sisters) என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற சகோதரிகள்.
கர்நாடக இசையிலும் பக்திப்பாடல்களிலும் புகழ்பெற்று விளங்கிய பல இரட்டையருக்கு (ராதா-ஜெயலட்சுமி, பாம்பே சகோதரிகள், ரஞ்சனி-காயத்ரி, பிரியா சகோதரிகள்) இவர்கள் முன்னோடியாக விளங்கினர்.
சூலமங்கலம் ஜெயலட்சுமி
தமிழ் இசையுலகில் பிரபலமான கர்நாடக சங்கீதப் பாடகியர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் பாடியுள்ளனர். திரைப்படங்களில் பலவற்றில் பாடியிருந்தாலும் மிகவும் புகழ் பெற்றது பக்திப் பாடல்கள் மூலமாக. இவர்கள் பாடிய ‘கந்தசஷ்டி கவச’ மான ‘சஷ்டியை நோக்க சரவணபவ ஓம்’ மிகவும் பிரபலம்.
இவர்களில் ராஜலக்ஷ்மி தனது 54 ஆவது வயதில் 1992-ம் ஆண்டு காலமாகிவிட்டார். சரஸ்வதி என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 68-வது வயதில் காலமானார். சூலமங்கலம் ஜெயலக்ஷ்மி காலஞ்சென்ற ராஜலக்ஷ்மியின் மகன் முரளி மற்றும் காலஞ்சென்ற வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனின் மகளுமான வசந்தியுடன் சென்னை, பெசண்ட் நகரில் வசித்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகிலுள்ள சூலமங்கலம் இவர்களது சொந்த ஊர். தாய், தந்தையர் ராமசாமி அய்யர்-ஜானகி. இத்தம்பதியருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உண்டு. மூத்தவர் ஜெயலக்ஷ்மி, இளையவர் ராஜலக்ஷ்மி அடுத்தவர் சரஸ்வதி [பரத நாட்டியக் கலைஞர்], சகோதரர் சேதுராமன்.
இவ்விரு சகோதரியரும் குருமூர்த்தி என்ற ஆசிரியரிடம் கர்நாடக இசையைக் கற்றனர். இந்நிலையில் இவர்களது தந்தை மரணமடைந்ததால் இவர்களது மாமனார் சுவாமிநாதன் இவர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று குடியேற்றியதோடு பத்தமடை கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபால் ஐயர் ஆகியோரிடம் கர்நாடக இசையைத் தொடர்ந்து கற்க வசதி செய்து கொடுத்தார்.
நாளடைவில் இச்சகோதரிகள் கோவில்களிலும், சபாக்களிலும் கர்நாடக கச்சேரிகள் செய்துவந்தனர். பின்னர் அகில இந்திய வானொலியில் பாட இவர்களுக்கு வாய்ப்பு அமைந்தது.
இந்நிலையில் இவர்களுக்கு கண்காட்சி ஒன்றில் பாடுவதற்கு வாய்ப்பு கிட்டியது. அக்கண்காட்சிக்கு வந்திருந்த தியாகராஜபாகவதரும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் கவனித்து இவர்களது திறமையைக் கூறி திரைப்படங்களில் பாடுவதற்குப் பரிந்துரை செய்தனர்.
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஏராளமான படங்களில் பின்னணிப் பாடியுள்ள இச்சகோதரிகள் ரி.ஜி.லிங்கப்பா, ஜி.ராமனாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எஸ்.தக்ஷிணாமூர்த்தி, வி.தக்ஷிணாமூர்த்தி, நௌசாத், விஸ்வநாதன் – ராமமூர்த்தி, எஸ்.ராஜேஸ்வரராவ், சி.என்.பாண்டுரங்கன், ஜி.கே.வெங்கடேஷ், வி.குமார், ரி.ஆர்.பாப்பா, எம்.எல்.ஸ்ரீகாந்த், குன்னக்குடி வைத்தியநாதன், ஆத்மநாதன், சங்கர்-கணேஷ், ராஜன் – நாகேந்திரா, பிரதர் லக்ஷ்மணன், புகழேந்தி, பி.எஸ்.திவாகர் போன்ற பல இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் தனித்தும் ரி.எம்.சௌந்தரராஜன், ஏ.எல்.ராகவன், எஸ்.சி.கிருஷ்ணன், சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஜே.பி.சந்திரபாபு, கே.ஆர்.ராமசாமி, பாலமுரளி கிருஷ்ணா, கே.ஜே.யேசுதாஸ் போன்ற பாடகர்களுடனும், பீ.லீலா, எம்.எல்.வசந்தகுமாரி, எல்.ஆர்.ஈஸ்வரி, எம்.எல்.வசந்தகுமாரி, ரி.வி.ரத்னம், கே.ஜமுனாராணி, ஏ.ரத்னமாலா, பி.வசந்தா, சரளா, எல்.ஆர்.அஞ்சலி, எம்.ஆர்.விஜயா, ஆகிய பாடகிகளுடன் இணைந்து 1948-லிருந்து 1984-ம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளனர்.
சூலமங்கலம் ஜெயலக்ஷ்மி தரிசனம், டைகர் தாத்தாச்சாரி, ஜீவநாடி, அப்போதே சொன்னேனே கேட்டியா, ‘பிள்ளையார்’ போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கந்த சஷ்டியின் மகிமை பற்றியும் அந்தப்பாடலைப்பாடி அன்றாடம் பலரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் பரவசம் ஏற்படுத்திவரும் தெய்வீகக்குரல்களுக்கு சொந்க்காரர்களான சூலமங்கலம் சகோதரிகள் பற்றியும் இந்த நேரத்தில் தெரிந்து கொள்வது இன்னும் நல்லது.
18-ம் நுாற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவரான தேவராய சுவாமிகள் இயற்றியதுதான் கந்தசஷ்டி கவசம்.நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி “காக்க” வேண்டி முருகப்பெருமானை வேண்டுவதுதான் பாடலின் கரு.
இந்தப் பாடலின் இசை வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது என்றாலும் சூலமங்கலம் சகோதரிகள் பாடியதுதான் பிரபலமாக உள்ளது எங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது . இவர்கள் பாடியதை கேட்கும் போது முருகனின் உருவமும், இனம் புரியாத பரவசமும், மனதில் உற்சாகம், தன்னம்பிக்கை இவையெல்லாம் ஒருங்கே ஏற்படும்.
தமிழ்ப் பெண்களின் பூஜையறையில் இரண்டறக் கலந்துவிட்ட ‘கந்த சஷ்டி கவசத்தைப் பாடிய இந்த சூலமங்கலம் சகோதரிகள் கர்னாடக இசையில் புகழ்பெற்றுத் திகழ்ந்தவர்கள். ஜெயலட்சுமி-ராஜலட்சுமி சகோதரிகள் இருவரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் சூலமங்கலத்தில் இசைப் பாரம்பர்யம் மிக்க குடும்பத்தில்.
இவர்களது சொந்த ஊரிலேயே கே.ஜி.மூர்த்தி, பத்தமடை எஸ்.கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபலய்யர் ஆகியோரிடம் முறையாக சங்கீதம் பயின்றார்கள்.
பாட்டும் இசையுமாகவே இவர்களது பால்யம் கழிந்தது. கூடவே, தேசப் பக்தியும் தெய்வ பக்தியும் இணைந்திட, விழாக்களில் இவர்களைப் பாடப் பலரும் அழைத்தனர். கர்னாடக பக்தி இசையில் புகழ்பெறத் தொடங்கியதும், இவர்களை ‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்றே மக்கள் அழைத்தனர்.
1961-ம் ஆண்டு ‘அரசிளங்குமரி’ திரைப்படத்தில் பாடத் தொடங்கினர். சகோதரிகளுக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. ஆனாலும், முழு வேலையாக, திரை வாய்ப்புகளைத் தேடித் தேடியெல்லாம் இவர்கள் பாடியதில்லை. வரும் வாய்ப்புகளைக்கூட தேர்ந்தெடுத்தே ஒப்புக்கொண்டனர்.
‘தெய்வம்’ படத்தில் இடம் பெற்ற ‘வருவான்டி தருவான்டி மலையாண்டி… பழநி மலையாண்டி’ என்பது போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களை பாடியுள்ளனர்.
ஆன்மீக பாடல்களை பாடி ஆல்பமாக வெளியிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டினர் அப்படித்தான் கந்த சஷ்டி கவசத்தை பாடினர் மனமுருகி அவர்கள் தேனினும் இனிய குரலில் பாடிய கவசம்தான் இன்று உலகமெங்கும் ஒங்கி ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
இசைத் துறையில் இவர்கள் ஆற்றிய சாதனைகளுக்குப் பரிசாக, ‘முருக கானாமிர்தம்’, ‘குயில் இசைத்திலகம்’, ‘இசையரசிகள்’, ‘நாதக்கனல்’ ஆகியப் பட்டங்கள் இவர்களைத் தேடி வந்தன. 1983-ம் ஆண்டு ‘கலைமாமணி’ விருதும் தமிழக அரசின் சார்பில் சகோதரிகள் இருவருக்கும் வழங்கப்பட்டது.
சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான ராஜலட்சுமி 1992-ம் ஆண்டில் மறைந்தார். அவரது அக்கா ஜெயலட்சுமி சென்னை பெசன்ட் நகரில் 85-வது வயதில் காலமானார். சூலமங்கலம் சகோதரிகள் மறைந்தாலும் அவர்கள் பாடிய கந்த சஷ்டி பாடாலானது உலகம் உள்ளவரை அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.